Page Loader
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ்.ஐ.எஸ் எச்சரிக்கை
இந்த போட்டிகள் இந்த வாரம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ்.ஐ.எஸ் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 09, 2024
05:57 pm

செய்தி முன்னோட்டம்

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் என்ற பிரபல கால்பந்தாட்ட போட்டி தொடரின் காலிறுதி சுற்றின் போது, தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது. யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் என்பது ஃபிஃபா உலகக் கோப்பைக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகம் பார்க்கப்படும் போட்டியாகும். இந்த கால்பந்து போட்டி. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் யூனியனால் நடத்தப்படுவது. அதோடு, உலகின் மிகவும் மதிப்புமிக்க கால்பந்து போட்டிகளில் ஒன்றாகும். இந்த போட்டி தொடரின் காலிறுதிப் போட்டிகள் நடைபெறும் நான்கு மைதானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த போட்டிகள் இந்த வாரம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வெளியான எக்ஸ் பதிவின்படி, மைதானங்களை குறிவைத்து, 'அனைவரையும் கொல்லுங்கள்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

embed

தீவிரவாதிகள் எச்சரிக்கை

ISIS threatens terrorist attack during UEFA Champions League quarter-finals #ISIS #UEFA #UEFAChampionsLeague2024 #Football #Threat #SportsInfoFootball https://t.co/qZ2V2GwqoP— Sports Info (@sportsinfofeed) April 9, 2024