LOADING...
லிங்க்ட்இன் ஏஐ அப்டேட்: உங்களுக்குப் பிடித்தமான பதிவுகளை இனி ஏஐ தேர்வு செய்யும்!
லிங்க்டுஇன்

லிங்க்ட்இன் ஏஐ அப்டேட்: உங்களுக்குப் பிடித்தமான பதிவுகளை இனி ஏஐ தேர்வு செய்யும்!

எழுதியவர் Prasanna
Mar 14, 2026
11:28 am

செய்தி முன்னோட்டம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான லிங்க்ட்இன் (LinkedIn), தங்களது தளத்தில் பயனர்களுக்குத் தேவையான உள்ளடக்கங்களை மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்து வழங்குவதற்காகப் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளது. லிங்க்ட்இன் தளத்தில் நாம் பின்தொடரும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பதிவுகள் மட்டுமே இதுவரை நமது ஃபீடிஇல் அதிகமாகத் தோன்றும். ஆனால், இனி வரும் காலங்களில் பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப மிகவும் பொருத்தமான பதிவுகளை ஏஐ அல்காரிதம் கண்டறிந்து வழங்கும். பயனரின் சுயவிவரம், அவர் தேடும் வேலைவாய்ப்புகள் மற்றும் அவர் இதற்கு முன் ஈடுபாடு காட்டிய பதிவுகளை ஆராய்ந்து, அவருக்குப் பயனுள்ள தொழில்முறைச் செய்திகளை ஏஐ முன்னிலைப்படுத்தும்.

லிங்க்டுஇன்

புதிய மாற்றங்கள்:

வெறும் விளம்பரங்கள் அல்லது பயனருக்குத் தொடர்பில்லாத 'ஸ்பேம்' பதிவுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கிவிட்டு, தரமான உள்ளடக்கங்களை மட்டும் இது வழங்கும். லிங்க்ட்இன் தளத்திற்குப் புதிதாக வருபவர்கள் தங்களுக்குப் பிடித்தமான துறைகளைத் தேர்ந்தெடுக்கும் 'இன்ட்ரஸ்ட் பிக்கர்' வசதியும் சோதனையில் உள்ளது. பயனர்கள் லிங்க்ட்இன் தளத்தில் செலவிடும் நேரம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதும், தேவையற்ற தகவல்கள் அவர்களின் கவனத்தைச் சிதறடிக்கக் கூடாது என்பதுமே இந்த ஏஐ மேம்பாட்டின் முக்கிய நோக்கமாகும். தற்போது இந்த வசதி உலகம் முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் லிங்க்ட்இன் ஒரு சாதாரணச் சமூக வலைதளமாக இல்லாமல், ஒரு சிறந்த தொழில்முறை அறிவுப் பகிர்வுத் தளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement