NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
    3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

    Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 13, 2025
    04:14 pm

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாய்க்கிழமை ஷோபியனின் ஜின்பதர் கெல்லர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட மூவரில், இரண்டு பயங்கரவாதிகளும் ஷாஹித் குட்டாய் மற்றும் அட்னான் ஷாஃபி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இருவரும் சோபியானைச் சேர்ந்தவர்கள்.

    2023 ஆம் ஆண்டு லஷ்கரில் இணைந்த குட்டாய், கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி டேனிஷ் ரிசார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டார்.

    இதில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு ஓட்டுநர் காயமடைந்தனர்.

    கடந்த ஆண்டு மே மாதம் ஷோபியானில் உள்ள ஹீர்போராவில் பாஜக சர்பஞ்ச் ஒருவரைக் கொன்றதிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆபரேஷன் கெல்லர்

    உளவு செய்தியின் படி உரிய நடவடிக்கை எடுத்த ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்

    இது பற்றி ராணுவத்தின் அதிகாரபூர்வ X பக்கம் வெளியிட்ட அறிக்கைப்படி, ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவிலிருந்து "குறிப்பிட்ட உளவுத்துறை" தகவல் கிடைத்ததை அடுத்து, இராணுவம் ஆபரேஷன் கெல்லரைத் தொடங்கியது எனக்கூறியது.

    "இந்த நடவடிக்கையின் போது, ​​பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் இதன் விளைவாக மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்," என்று இராணுவம் X இல் எழுதியது.

    எனினும் இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும் கூறியுள்ளது.

    ஷோபியனில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து மூன்று ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    OPERATION KELLER

    On 13 May 2025, based on specific intelligence of a #RashtriyasRifles Unit, about presence of terrorists in general area Shoekal Keller, #Shopian, #IndianArmy launched a search and destroy Operation. During the operation, terrorists opened heavy fire and fierce… pic.twitter.com/KZwIkEGiLF

    — ADG PI - INDIAN ARMY (@adgpi) May 13, 2025

    தேடுதல்

    பஹல்கம் தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும் ராணுவம் 

    இதற்கிடையே, ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் என்று நம்பப்படும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற மூன்று பயங்கரவாதிகளான அதில் உசேன் தோக்கர், அலி பாய் மற்றும் ஹாஷிம் மூசா ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டு, 'பயங்கரவாதமற்ற காஷ்மீர்' என குறிப்பிட்டு, சுவரொட்டிகளை இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் ஒட்டியுள்ளன.

    ஷோபியன் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    இவர்களைபற்றி நம்பகமான தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்
    தீவிரவாதம்
    தீவிரவாதிகள்

    சமீபத்திய

    Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர்
    'சக்தி' புயல்: அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    இணையத்தில் உலவும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் இளம் தலைமுறையை உளவியல் ரீதியாக பாதிக்கின்றன: ஆய்வு இந்தியா
    CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சிபிஎஸ்இ

    ஜம்மு காஷ்மீர்

    பஹல்காம் தொடர்பான அறிக்கையை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு விளக்கம்; புதிய அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி
    ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் மாநிலங்களில் ராணுவ சீருடைகள் உற்பத்தி, விற்பனை, சேமிப்பிற்கு தடை உத்தரகாண்ட்
    'பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதில் ஆச்சரியமில்லை': ஐ.நா.வில் இந்தியா  பயங்கரவாதம்
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, 48 சுற்றுலா தலங்களை மூடியது ஜம்மு-காஷ்மீர் அரசு பஹல்காம்

    பயங்கரவாதம்

    "தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்": சூளுரைத்த பிரதமர்  பிரதமர் மோடி
    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு மத்திய அரசு
    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன? மத்திய அரசு
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூட்டை தொடங்கிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி பாகிஸ்தான்

    தீவிரவாதம்

    26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை தீவிரவாதிகள்
    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்? பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை அமித்ஷா
    மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள் ரஷ்யா

    தீவிரவாதிகள்

    பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் இருவர் பலி பாகிஸ்தான்
    ஜம்மு காஷ்மீரில், பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்; பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம் ஜம்மு காஷ்மீர்
    ஜம்முவின் தோடாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 3 நாட்களில் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல் ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025