Loading...
விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைத்தது தமிழக அரசு; முழு விபரம்
விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைத்தது தமிழக அரசு

விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைத்தது தமிழக அரசு; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 23, 2026
09:02 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் உள் மாநில விமான சேவைகளை அதிகரிக்கவும், பயணக் கட்டணத்தை குறைக்கவும் தமிழக அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதன்படி, விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விமான எரிபொருள் (ATF) மீதான வாட் வரியை குறைத்து வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை வெள்ளிக்கிழமை அக்டோபர் 23) அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை மூலம் தொழில் அதிபர்கள் மற்றும் வணிகப் பயணிகளின் விமானப் போக்குவரத்து செலவு பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரி விகிதம்

சென்னை மற்றும் பிற மாவட்ட விமான நிலையங்களின் வரி விகிதம்

புதிய வரி குறைப்பின்படி, சென்னை விமான நிலையத்தில் உள் மாநில விமானங்களுக்கு நிரப்பப்படும் எரிபொருளுக்கான வாட் வரி 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் போன்ற தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் இந்த வரி 29 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரிக்குறைப்பு விமான நிறுவனங்களுக்கு பெரும் நிதி நிவாரணத்தை வழங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிபந்தனைகள்

அமலுக்கு வரும் காலம் மற்றும் விமான நிறுவனங்களுக்கான நிபந்தனைகள்

இந்த வரிச் சலுகை அக்டோபர் 31 / நவம்பர் 1, 2026 நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இது வரும் அக்டோபர் 31, 2027 நள்ளிரவு வரை ஒரு ஆண்டிற்கு நடைமுறையில் இருக்கும்.

இந்த வரியை சலுகை விலையில் பெற விரும்புவோர், எரிபொருள் வாங்கியதற்கான உரிய உறுதிமொழிப் படிவத்தை பூர்த்தி செய்து மாதாந்திர வரி அறிக்கையுடன் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வரிச் சலுகை மூலம் தமிழ்நாட்டிற்குள் கூடுதல் விமான வழிகளை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

பொருளாதார வளர்ச்சி

மாவட்ட இடையிலான இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும்.

வரிக்குறைப்பு காரணமாக விமான நிறுவனங்கள் தங்களின் சேவை எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும், இதனால் கோவை, மதுரை, திருச்சி போன்ற தொழில் நகரங்களுக்கு இடையிலான பயணம் மேலும் வேகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட அளவில் வணிகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த இந்த வரிக்க குறைப்பு மிக முக்கிய காரணியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT