LOADING...
"விண்வெளியிலிருந்து வந்த ஏவுகணை!" - கமேனியை வீழ்த்திய புளூ ஸ்பாரோ
கமேனியை வீழ்த்திய புளூ ஸ்பாரோ

"விண்வெளியிலிருந்து வந்த ஏவுகணை!" - கமேனியை வீழ்த்திய புளூ ஸ்பாரோ

எழுதியவர் Venkatalakshmi V
Mar 06, 2026
04:00 pm

செய்தி முன்னோட்டம்

பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதல், நவீனப் போர் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்திய அதிநவீன 'Blue Sparrow' ஏவுகணை, அதன் வினோதமான வேகம் மற்றும் பாதையினால் "விண்வெளியிலிருந்து வந்த ஏவுகணை" என்று வர்ணிக்கப்படுகிறது. இஸ்ரேலின் ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் ஒரு 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணையாகும்.

விவரங்கள்

என்ன இந்த 'புளூ ஸ்பாரோ'?

விமானத்திலிருந்து ஏவப்பட்டவுடன், Blue Sparrow பூமியின் வளிமண்டலத்தின் விளிம்பு வரை (சுமார் 2,000 கி.மீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது) மேலே ஏறிச் சென்று, அங்கிருந்து இலக்கை நோக்கி அதிவேகமாகப் பாயும். 6.5 மீட்டர் நீளமும், 1.9 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை, வளிமண்டலத்திற்கு வெளியே சென்று மீண்டும் உள்ளே நுழைவதால், எதிரி நாட்டு ரேடார்களால் இதைக் கண்டறிந்து தடுப்பது மிகவும் கடினம்.

உளவுத்துறை

கமேனி வீழ்ந்தது எப்படி? - உளவுத்துறையின் மாஸ்டர் பிளான்

இந்தத் தாக்குதல் வெறும் ஏவுகணை பலத்தால் மட்டும் நடக்கவில்லை; அமெரிக்காவின் CIA மற்றும் இஸ்ரேலின் மொசாட் ஆகியவற்றின் மிக நுணுக்கமான உளவு வேலையால்தான் சாத்தியமானது. 1. தவறான தகவல்: தாக்குதலுக்கு முன்பாக, இஸ்ரேலிய ராணுவ தளபதிகள் வார இறுதி விடுமுறைக்காக வீட்டிற்குச் செல்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, தாங்கள் அமைதியாக இருப்பதாக ஈரானை நம்ப வைத்தனர். 2. நேரடி கண்காணிப்பு: கமேனியின் மெய்க்காப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நடமாட்டத்தை மொசாட் பல மாதங்களாக கண்காணித்து வந்தது. 3. தொடர்பு முடக்கம்: தாக்குதலின் போது, டெஹ்ரானில் உள்ள சுமார் 12 மொபைல் டவர்களை இஸ்ரேல் செயலிழக்க செய்தது. இதனால் பாதுகாப்புப் படையினரால் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை விடுக்க முடியாமல் போனது.

Advertisement

தாக்குதல்

அந்த 9.40 மணித் தாக்குதல்

இஸ்ரேலிய நேரப்படி காலை 6 மணிக்கு எஃப்-15 (F-15) ரக விமானங்கள் புறப்பட்டன. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, டெஹ்ரான் நேரப்படி காலை 9.40 மணிக்கு சுமார் 30 ஏவுகணைகள் கமேனி தங்கியிருந்த வளாகத்தைத் தாக்கின. இதில் கமேனி மட்டுமின்றி, புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை முழுமையாகத் தோல்வியடைய செய்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தொழில்நுட்ப வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

Advertisement