LOADING...
சிக்கன் நெக் பகுதியில் புதிய யூனியன் பிரதேசமா? தீயாய் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு
பீகார் மற்றும் மேற்கு வங்க மாவட்டங்களை இணைத்து புதிய யூனியன் பிரதேசம் அமையவுள்ளதாக வெளியான தகவல் வதந்தி

சிக்கன் நெக் பகுதியில் புதிய யூனியன் பிரதேசமா? தீயாய் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 08, 2026
08:52 am

செய்தி முன்னோட்டம்

பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை மத்திய அரசு சனிக்கிழமை (மார்ச் 7) திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் என்றும், இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மை கண்டறியும் பிரிவான பிஐபி கேட்டுக்கொண்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

தகவல்

வைரலாகும் தவறான தகவல்

வியூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிலிகுரி காரிடார் பகுதியை வலுப்படுத்தும் நோக்கில், பின்வரும் மாவட்டங்களை இணைத்து புதிய யூனியன் பிரதேசம் அமைக்கப்பட உள்ளதாக வதந்திகள் பரவின: பீகார்: பூர்ணியா, அராரியா, கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார். மேற்கு வங்கம்: மால்டா மற்றும் உத்தர தினாஜ்பூர். அரசாங்கத்திடம் இது போன்ற எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று பிஐபி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

முக்கியத்துவம்

சிலிகுரி காரிடாரின் முக்கியத்துவம்

இந்தியாவின் சிக்கன் நெக் என்று அழைக்கப்படும் சிலிகுரி காரிடார், சுமார் 20 முதல் 22 கிமீ அகலம் கொண்ட ஒரு குறுகிய நிலப்பகுதியாகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே நிலப்பகுதியாகும். சுமார் 4.5 கோடி மக்களின் வாழ்வாதாரமாகவும், ராணுவ ரீதியாகவும் மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியாகவும் இது கருதப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டே இத்தகைய வதந்திகள் பரப்பப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement

அதிகாரப்பூர்வ தகவல்

அதிகாரப்பூர்வ ஆதாரங்களை நாடுங்கள்

தவறான தகவல்கள் மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், தகவல்களைப் பகிரும் முன் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் அவற்றைச் சரிபார்க்குமாறு பிஐபி அறிவுறுத்தியுள்ளது. எந்தவொரு மாநிலத்தைப் பிரிக்கும் திட்டமோ அல்லது புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்கும் ஆலோசனையோ தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement