மகாராஷ்டிராவில் பதற்றம்! துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்து
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் இன்று (புதன்கிழமை) காலை விபத்துக்குள்ளானது. 66 வயதான அஜித் பவார், தனது சொந்த தொகுதியான பார்மதிக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தார். அங்குள்ள ஓடுதளத்தில் விமானத்தைத் தரையிறக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த உடனேயே அங்கிருந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர். எனினும், விமானத்தில் பயணித்த அஜித் பவாரின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | A plane crash reported in Baramati, Maharashtra. More details awaited.
— ANI (@ANI) January 28, 2026
Visuals from the spot. pic.twitter.com/xkx0vtY5cp