LOADING...
காண்க: ஜம்மு-காஷ்மீர் சோனமார்க்கில் நள்ளிரவில் பனிச்சரிவு; சுற்றுலாப் பயணிகள் தப்பினர்
ஜம்மு-காஷ்மீர் சோனமார்க்கில் நள்ளிரவில் பனிச்சரிவு

காண்க: ஜம்மு-காஷ்மீர் சோனமார்க்கில் நள்ளிரவில் பனிச்சரிவு; சுற்றுலாப் பயணிகள் தப்பினர்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 28, 2026
08:16 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் சுற்றுலா தலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10:12 மணியளவில் சக்திவாய்ந்த பனிச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து வந்த பிரம்மாண்ட பனிச் சுவர் அங்குள்ள கட்டிடங்களை மூழ்கடித்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பனிச்சரிவின் வேகம் அதிகமாக இருந்தபோதிலும், நல்வாய்ப்பாக இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அவசரக்கால மீட்புக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

போக்குவரத்து

காஷ்மீரில் முடங்கிய போக்குவரத்து

காஷ்மீர் முழுவதும் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதளத்தில் பனி தேங்கியுள்ளதால், நேற்று இயக்கப்பட வேண்டிய 58 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் (NH 44) பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாகப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் காந்தர்பால் உட்பட 11 மாவட்டங்களுக்குப் பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2,000 மீட்டருக்கு மேல் உயரத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement