விமான பயணிகளுக்காக..தொலைந்து போன உங்கள் லக்கேஜ்களை கண்டுபிடிப்பதை எளிதாக்கும் Android
செய்தி முன்னோட்டம்
ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் தொலைந்த லக்கேஜ்களை கண்டுபிடிக்க உதவும் வகையில் கூகிள் ஒரு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் அதன் சமீபத்திய அம்சம் மார்ச் மாத பிக்சல் போன்களுக்கான மென்பொருள் புதுப்பிப்புடன் வருகிறது, இது Pixel Drop என்று அழைக்கப்படுகிறது. இந்த வசதி, தங்கள் சாமான்களில் ஃபைண்ட் ஹப்-இணக்கமான டிராக்கர் டேக்கை சேர்த்த பயனர்கள் அதன் இருப்பிடத்தை பங்கேற்கும் விமான நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
பயனர் வழிகாட்டி
உங்கள் சாமான்களின் இருப்பிடத்தை விமான நிறுவனங்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வது
இந்த புதிய அம்சம், பயனர்கள் தங்கள் தொலைந்த பொருளை தேர்ந்தெடுத்து "share item location" எனும் அம்சத்தை Find Hub செயலி மூலம் செயல்படுத்தும். இது ஒரு தனித்துவமான, பாதுகாப்பான URL-ஐ உருவாக்குகிறது. அதை, விமான நிறுவனத்தின் மொபைல் பயன்பாடு அல்லது வலைத்தளத்தில் ரியல் டைம் லக்கேஜ் கண்காணிப்பிற்காக பயன்படுத்தலாம் ஏழு நாட்களுக்குப் பிறகு இணைப்பு தானாகவே காலாவதியாகிவிடும். மேலும் உங்கள் மொபைல், லக்கேஜ்கள் உங்களிடம் திரும்பி வந்ததை கண்டறிந்ததும் ஷேரிங் நிறுத்தப்படும்.
விமான நிறுவன ஒத்துழைப்பு
10க்கும் மேற்பட்ட உலகளாவிய விமான நிறுவனங்கள் ஏற்கனவே Find Hub-ஐ ஏற்றுக்கொண்டுள்ளன
10க்கும் மேற்பட்ட உலகளாவிய விமான நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் லக்கேஜ்களை மீட்டெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக Find Hub இருப்பிடங்களை ஏற்கத் தொடங்கியுள்ளன. இவற்றில் Ajet, ஏர் இந்தியா, சீனா ஏர்லைன்ஸ், லுஃப்தான்சா, ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ், ப்ரஸல்ஸ் ஏர்லைன்ஸ், சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், Saudia Airlines, ஸ்கேண்டிநாவியன் ஏர்லைன்ஸ் மற்றும் துர்கிஷ் ஏர்லைன்ஸ் ஆகியவை அடங்கும். இந்த சேவையை விரிவுபடுத்துவதற்காக எதிர்காலத்தில் மேலும் பல விமான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற Google திட்டமிட்டுள்ளது.