LOADING...
விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இனி 48 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் ஃபைன் கிடையாது
DGCA டிக்கெட் ரீஃபண்ட் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இனி 48 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால் ஃபைன் கிடையாது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2026
06:12 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் விமான பயணங்களை மேற்கொள்வோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தலைவலி, டிக்கெட் ரத்து செய்யும் போது பிடிக்கும் அதிகப்படியான கட்டணம் ஆகும். இதனைச் சரிசெய்யும் வகையில், டிஜிசிஏ(DGCA) டிக்கெட் ரீஃபண்ட் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, பயணிகள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி அதனை ரத்து செய்யலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம். (குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு). கடந்த டிசம்பர் 2025-ல் இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட செயல்பாட்டுச் சிக்கல்களின் போது, ஆயிரக்கணக்கான பயணிகள் ரீஃபண்ட் பெற முடியாமல் தவித்தனர். இது போன்ற புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்தே, பயணிகளுக்கு சாதகமாக இந்த விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

மற்றவை

புதிய விதிகளின் சிறப்பம்சங்கள்

பெயர் திருத்தம் இலவசம்: டிக்கெட் முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் பெயரில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டினால், அதைச் சரிசெய்ய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது. விரைவான ரீஃபண்ட்: நீங்கள் ஏஜென்ட் அல்லது மூன்றாம் தரப்பு இணையதளங்கள் (Travel Agents) மூலம் டிக்கெட் எடுத்திருந்தாலும், ஏர்லைன்ஸ் நிறுவனம் 14 வேலை நாட்களுக்குள் ரீஃபண்ட் தொகையை வழங்க வேண்டும். இதற்கான முழு பொறுப்பையும் ஏர்லைன்ஸ் நிறுவனமே ஏற்க வேண்டும். மருத்துவக் காரணங்கள்: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தால், அதற்கான சிறப்பு சலுகைகளும் இந்த புதிய விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement