ஆன்லைன் மோசடி: செய்தி
டிஜிட்டல் கைது மோசடி: நாடு முழுவதும் விசாரிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் முழு அதிகாரம்
இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வரும் டிஜிட்டல் கைது மோசடி வழக்குகளைக் கையாள்வதற்கு உடனடியாக தேசிய அளவில் கவனம் தேவை என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கிரெடிட் கார்டு மோசடியில் பாதிக்கப்பட்டால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவரும் நிலையில், கிரெடிட் கார்டு மோசடிகளும் பெருகி வருகின்றன.
Black Friday மோசடி எச்சரிக்கை! 2,000க்கும் மேற்பட்ட போலி அமேசான், சாம்சங் தளங்கள் கண்டறியப்பட்டன
விடுமுறை ஷாப்பிங் சீசன் சூடுபிடித்துள்ள நிலையில், மோசடியான ஆன்லைன் கடைகளில் மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனமான CloudSEK இன் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
நிதியமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி: ஓய்வுபெற்ற நபரிடம் ₹1.47 கோடி அபேஸ்
மும்பையில், ஓய்வுபெற்ற ஒருவரிடம் போலி பங்குச் சந்தை வர்த்தகத் திட்டங்கள் மூலம் ₹1.47 கோடி ரூபாய் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உங்களுக்கு வரும் அமலாக்கத்துறை சம்மன் உண்மையா, போலியா? ஆன்லைன் மோசடியைத் தவிர்க்கும் வழிகள்
அமலாக்கத்துறை (Enforcement Directorate) பெயரில் போலியான சம்மன்கள் புழக்கத்தில் விடப்பட்டு, மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், சம்மனின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்கும் வழிமுறைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் எச்சரிக்கையுடன் வெளியிட்டுள்ளது.
தொடரும் டிஜிட்டல் கைது மோசடி; ₹32 கோடி இழந்த பெங்களூர் பெண்; விழிப்புணர்வா இருங்க மக்களே
பெங்களூரைச் சேர்ந்த 57 வயதான ஒரு மென்பொருள் பொறியாளர், சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மிரட்டிச் செயல்பட்ட மோசடி கும்பலால், ஆறு மாத காலமாகக் கிட்டத்தட்ட ₹32 கோடி வரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் டிஜிட்டல் கைது மோசடி; புதிய எச்சரிக்கை வெளியிட்டது என்பிசிஐ
அண்மைக் காலமாக அதிகரித்து வரும் டிஜிட்டல் கைதுகள் (Digital Arrests) என்ற சைபர் கிரைம் மோசடி குறித்துத் தேசியப் பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமெயிலை ஹேக் செய்து பிரபல மருந்து நிறுவனத்திடமிருந்து ₹2.16 கோடி மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
பெங்களூரைச் சேர்ந்த குரூப் ஃபார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் ஆகிய இரு மருந்து நிறுவனங்களுக்கிடையேயான மின்னஞ்சல் தகவல் தொடர்பைக் குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் நடத்திய பெரிய மோசடியில், சுமார் ரூ.2.16 கோடி பணம் சட்டவிரோதமாகத் திருடப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் வங்கிக் கணக்கில் சைபர் கிரைம் மோசடி: ₹55 லட்சத்துக்கும் மேல் இழப்பு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நான்கு முறை மக்களவை உறுப்பினருமான கல்யாண் பானர்ஜி, ஆன்லைன் நிதி மோசடியில் சிக்கி, தனது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கணக்கிலிருந்து ₹55 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
128 வழக்குகள்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிக்கு எதிராக மும்பையில் வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
மும்பையில் மூத்தக் குடிமக்களை குறிவைத்து அதிகமாக நடத்தப்படும் டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடிகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, மும்பை காவல்துறை நகரம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
2025இல் சைபர் மோசடியில் ₹1,000 கோடியை இழந்த டெல்லி மக்கள்; காவல்துறை தகவல்
இந்த ஆண்டு இதுவரை, சைபர் கிரிமினல்கள் டெல்லியில் வசிப்பவர்களிடமிருந்து சுமார் ₹1,000 கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ₹58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்; மூன்று பேர் கைது
மும்பையைச் சேர்ந்த 72 வயது தொழிலதிபர் ஒருவர், நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளில் ஒன்றின் மூலம், ₹58 கோடியை இழந்துள்ளார்.
இந்தியாவின் முதல் பயோமெட்ரிக் அங்கீகார முறையை அறிமுகம் செய்த Razorpay, Yes Bank
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இந்தியாவின் முதல் பயோமெட்ரிக் கார்டு அங்கீகார முறையை Razorpay மற்றும் Yes Bank அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்தியா போஸ்ட் நிறுவனத்தின் பெயரில் வரும் மோசடி எஸ்எம்எஸ்; எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
இந்தியா போஸ்ட் நிறுவனத்திடம் இருந்து வருவது போல ஒரு போலியான எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது. இந்தச் செய்தி, பயனர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்க ஒரு சந்தேகத்திற்கிடமான இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கூறுகிறது.
வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழால் சைபர் கிரைமில் ₹1.9 லட்சம் இழந்த அரசு ஊழியர்
மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஒரு அரசு ஊழியர், வாட்ஸ்அப் வழியாக வந்த திருமண அழைப்பிதழை கிளிக் செய்ததால் ₹1.9 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
பரிமேட்ச் எனும் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடிக்கு மேல் இழந்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு கட்டுப்பாடு: மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
மக்களே அலெர்ட்; ஆன்லைனில் புதிதாக பரவும் CAPTCHA மோசடி
CAPTCHA மோசடி எனப்படும் ஒரு புதிய சைபர் அச்சுறுத்தல் பரவி வருகிறது. இது ஏமாற்றும் மனித சரிபார்ப்பு அறிவுறுத்தல்கள் மூலம் இணைய பயனர்களை குறிவைக்கிறது.
போலி வாலட் எக்ஸ்டன்சன்களை பயன்படுத்தி $1 மில்லியனுக்கும் அதிகமாக கிரிப்டோகரன்சி திருட்டு
GreedyBear என்ற பெரிய அளவிலான சைபர் கிரைம் மோடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, இது Mozilla Firefox இல் 150 க்கும் மேற்பட்ட மோசடியான பிரவுசர் எக்ஸ்டன்சன்கள் மூலம் கிரிப்டோகரன்சி பயனர்களை குறிவைத்து செயல்பட்டுள்ளது.
இந்த எண்களில் இருந்து வரும் மொபைல் அழைப்புகளை ஏற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு டிராய் எச்சரிக்கை
போலி அழைப்புகள் மற்றும் செய்திகளின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நெட்வொர்க் மட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளது.
பெங்களூரில் 9 மணி நேரம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி; இரண்டு பெண்களுக்கு நேர்ந்த சோகம்
பெங்களூரில் இரண்டு பெண்கள் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் பாதிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீங்கள் பிரைம் சந்தாதாரரா? இந்த மோசடியில் சிக்கிடாதீங்க; அமேசான் எச்சரிக்கை
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பயனர்களை குறிவைத்து போலி மின்னஞ்சல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, உலகளவில் உள்ள தனது 200 மில்லியனுக்கும் அதிகமான பிரைம் உறுப்பினர்களுக்கு அமேசான் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
36,000 போலி அமேசான் சைட்கள், 75,000 மெசேஜ்கள் -அதிகரிக்கும் AI மோசடி
அமேசானின் பிரைம் டே 2025 நெருங்கி வரும் நிலையில், சைபர் பாதுகாப்பு நிறுவனமான McAfee நடத்திய புதிய ஆய்வில், இந்த நிகழ்வு தொடர்பான மோசடி முயற்சிகளில் கவலையளிக்கும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முதலீடு என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடியில் ரூ.2 கோடியை இழந்த ஆந்திர பிரதேச பேராசிரியர்
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் போலி முதலீட்டு ஆலோசனை வழங்கும் வாட்ஸ்அப் குழுவில் ஈர்க்கப்பட்டு, ஒரு அதிநவீன சைபர் கிரைம் மோசடியில் கிட்டத்தட்ட ரூ.2 கோடியை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கி சார்ந்த மோசடிகள் 2025 நிதியாண்டில் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆர்பிஐ தகவல்
2024-25 நிதியாண்டில் வங்கித் துறை முழுவதும் மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு உயர்வை சந்தித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணால் ₹6.5 கோடியை இழந்த இந்திய தொழிலதிபர்
நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் டேட்டிங் செயலியில் சந்தித்த ஒரு பெண்ணால் மோசடியான ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்து ₹6.5 கோடியை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பான் கார்டு 2.0 மோசடி; புதுவகை சைபர் கிரைம் குறித்து என்பிசிஐ எச்சரிக்கை
டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சைபர் கிரைம் குற்றவாளிகள் பயனர்களை ஏமாற்ற புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.
வெளியான சில மணிநேரத்திலேயே ஆன்லைனில் கசிந்தது மோகன்லால்-பிரித்விராஜின் 'எல்2: எம்புரான்'
திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் நடித்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படமான L2: எம்புரான், ஆன்லைனில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் 1 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்; ஆன்லைன் மோசடி தொடர்பாக நடவடிக்கை
ஆன்லைன் மோசடியைத் தடுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், ஜனவரி 2025 இல் கிட்டத்தட்ட ஒரு கோடி (10 மில்லியன்) இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது.
டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதார் மூலம் தீர்வு; இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆலோசனை
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மற்றும் தலைவரான நந்தன் நிலேகனி, அதிகரித்து வரும் டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதாரை ஒரு சாத்தியமான தீர்வாக முன்மொழிந்துள்ளார்.
கால் மெர்ஜிங் மூலம் நடக்கும் புதிய மோசடி; என்பிசிஐ பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவில் உள்ள என்பிசிஐ அமைப்பு ஒரு புதிய மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏஐ மூலம் அரங்கேறும் காதல் மோசடிகள் அதிகரிப்பு; இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்
பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடும் வேளையில், ஆன்லைன் காதல் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நிதி பாதுகாப்புக்காக பிரத்தியேகமான .bank.in மற்றும் .fin.in டொமைன்கள் அறிமுகம் செய்கிறது ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் நிதி மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கும் பிரத்யேக இணைய டொமைன்களை இந்திய வங்கிகளுக்கான .bank.in மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு .fin.in ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
எல்.ஐ.சி போல செயல்படும் போலி செயலிகள், கவனமாக இருங்கள்!
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தனது பெயரில் செயல்படும் போலி மொபைல் செயலிகள் குறித்து பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உலக நாடுகளை விட 44% அதிக சைபர் கிரைம்களை எதிர்கொள்ளும் இந்தியா
முன்னணி சைபர் செக்யூரிட்டி தீர்வுகள் வழங்குநரான செக் பாயிண்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் தனது ஆண்டறிக்கையில் இந்திய நிறுவனங்கள் ஆபத்தான இணையத் தாக்குதல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது.
ஆன்லைன் முதலீட்டு மோசடியில் ரூ.90 லட்சம் பணத்தை இழந்த முன்னாள் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி
ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன் நம்பியார் சமீபத்தில் வாட்ஸ்அப் அடிப்படையிலான முதலீட்டு மோசடிக்கு பலியாகி, 850% வருமானம் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களிடம் ₹90 லட்சத்துக்கு மேல் இழந்தார்.
சைபர் கிரைம் மோசடியில் ₹11 கோடி இழந்த பெங்களூர் தொழில்நுட்ப வல்லுநர்
பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், போலீஸ், சுங்கம் மற்றும் அமலாக்க இயக்குனரக அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்த நபர்களிடம் ₹11 கோடி மோசடி இழந்துள்ளார்.
சைபர் கிரைம் மோசடியில் ரூ.9 லட்சம் இழப்பு; மக்களே அலெர்ட்; இப்படிக் கூட மோசடி நடக்கலாம்
டெல்லியைச் சேர்ந்த ஒருவர் அதிநவீன சைபர் கிரைம் மோசடிக்கு பலியாகி, மின்சாரத் துறை அதிகாரிகளைப் போல் போலியாக மோசடி செய்பவர்களிடம் ரூ.9 லட்சத்தை இழந்தார்.
I4C போர்ட்டல்: இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய கருவி; எப்படி பயன்படுத்துவது?
டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை ஆபத்தான வகையில் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு சமீபத்தில் I4C என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை; மத்திய பிரதேசத்தில் சோகம்
மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் பகுதிநேர ஆசிரியை ரேஷ்மா பாண்டே, சைபர் கிரைம் மோசடி நபர்களின் அச்சுறுத்தல் காரணமாக விஷம் குடித்து உயிரிழந்தார்.