NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் 1 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்; ஆன்லைன் மோசடி தொடர்பாக நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் 1 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்; ஆன்லைன் மோசடி தொடர்பாக நடவடிக்கை
    ஆன்லைன் மோசடி தொடர்பாக இந்தியாவில் 1 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

    இந்தியாவில் 1 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்; ஆன்லைன் மோசடி தொடர்பாக நடவடிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 22, 2025
    03:21 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆன்லைன் மோசடியைத் தடுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், ஜனவரி 2025 இல் கிட்டத்தட்ட ஒரு கோடி (10 மில்லியன்) இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது.

    இது இந்தியாவில் இந்த தளத்தின் மிகப்பெரிய மோசடி எதிர்ப்பு நடவடிக்கையாக அமைந்துள்ளது.

    இது பயனர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

    வாட்ஸ்அப்பின் சமீபத்திய இணக்க அறிக்கையின்படி, ஜனவரி 1 முதல் ஜனவரி 30 வரை 99 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

    இவற்றில், 13.27 லட்சம் கணக்குகள் பயனர் புகார்களைப் பெறுவதற்கு முன்பே முன்கூட்டியே தடை செய்யப்பட்டன.

    ஸ்பேம் செய்தி அனுப்புதல், மோசடிகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட கணக்குகள் இந்த தடை நடவடிக்கைகளில் குறிவைக்கப்பட்டன.

    தானியங்கி அமைப்பு

    தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு

    சந்தேகத்திற்கிடமான நடத்தையைக் கண்டறிய வாட்ஸ்அப் ஒரு மேம்பட்ட தானியங்கி அமைப்பைக் கொண்டுள்ளது.

    ஒரு வாட்ஸ்அப் கணக்கு தளக் கொள்கைகளை மீறினால், அது உடனடியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கூடுதலாக, பயனர் புகார்களின் அடிப்படையில் நிறுவனம் மேனுவலாக நடவடிக்கை எடுக்கிறது.

    ஜனவரியில், 9,474 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இது 239 கணக்குகளை தடை செய்ய வழிவகுத்தது.

    பயனர்கள் சந்தேகத்திற்கிடமான செய்திகளைப் புகாரளிக்கலாம் மற்றும் அரட்டை அமைப்புகளிலிருந்து நேரடியாக தொடர்புகளைத் தடை செய்யலாம்.

    பாதுகாப்பான டிஜிட்டல் சூழலைப் பராமரிப்பதற்கான வாட்ஸ்அப்பின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.

    இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் பயனர்களை சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாட்ஸ்அப்
    ஆன்லைன் மோசடி
    ஆன்லைன் புகார்
    மெட்டா

    சமீபத்திய

    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா

    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப் யுபிஐ ஐடியை ஞாபகம் வைத்துக்கொள்ள சிரமாம உள்ளதா? தனிப்பயனாக்கப்பட்ட யுபிஐ எண்ணை உருவாக்குவது எப்படி? யுபிஐ
    வாட்ஸ்அப் செய்தி முன்னோட்டங்களை எவ்வாறு முடக்குவது தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் குரல் அழைப்புகளை மேற்கொள்வதில் சிக்கலா? இதை முயற்சித்துப் பாருங்க மொபைல் ஆப்ஸ்
    வாட்ஸ்ஆப்பில் புதிதாக அறிமுகமாகும் 'Chat with Us'; இதன் சிறப்பம்சங்கள் என்ன? ஆண்ட்ராய்டு

    ஆன்லைன் மோசடி

    ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி? செயற்கை நுண்ணறிவு
    சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்! சமூக வலைத்தளம்
    ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்! யுபிஐ
    காவல்துறை அதிகாரியிடமே ரூ.2 லட்சத்தை மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பல்! டெல்லி

    ஆன்லைன் புகார்

    பெற்றோர்களை மிரட்டும் பைஜூஸ் நிறுவனம்! குவியும் புகார்கள்! இந்தியா
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்
    அடிக்கடி கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரா?உஷார்!! பயனர் பாதுகாப்பு
    பணம் வாங்க QR Code-யை இப்படி பயன்படுத்தாதீங்க! மொத்த பணமும் போய்விடும்; எச்சரிக்கை தொழில்நுட்பம்

    மெட்டா

    இனி லைக்ஸ் எண்ணிக்கையை இன்ஸ்டாகிராமில் மறைக்க முடியும்; எப்படி தெரியுமா? இன்ஸ்டாகிராம்
    அண்டர்-ஏஜ் பயனர்களைக் கண்டறிய இன்ஸ்டாகிராமில் AI ஐப் பயன்படுத்த திட்டம்  இன்ஸ்டாகிராம்
    இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வாங்கிய விவகாரம்: வழக்கை எதிர்க்கொள்ளும் மெட்டா இன்ஸ்டாகிராம்
    ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடை சட்டத்திற்கு மெட்டா கண்டனம் சமூக ஊடகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025