
மீரட் கொலை: போலி மருந்துச் சீட்டு தயாரித்து, கணவருக்கு தூக்க மருந்து வாங்கி கொலை செய்தது அம்பலம்
செய்தி முன்னோட்டம்
மீரட்டைச் சேர்ந்த முஸ்கன் ரஸ்தோகி என்ற பெண், தனது கணவரை தூக்க மருந்து கொடுத்து கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி , தனது காதலரின் உதவியுடன் ஒரு சிமெண்ட் டிரம்மில் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
கணவரை கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு Anti-depressant மருந்துகளை வாங்குவதற்காக மருத்துவரின் மருந்துச் சீட்டை மாற்றியதாக காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மீரட் கூடுதல் எஸ்பி ஆயுஷ் விக்ரமின் கூற்றுப்படி, முஸ்கன் தனக்கு anxiety பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி உள்ளூர் மருத்துவரைச் சந்தித்துள்ளார்.
அவரிடமிருந்து Anti anxiety மருந்துகளுக்கான மருந்துச்சீட்டைப் பெற்ற்றுள்ளார்.
பின்னர் கூகிளில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை ஆராய்ந்து, ஒரு போலி மருந்துச் சீட்டை தயாரித்து, அதில் மருந்துகளின் பெயர்களை மாற்றி எழுதியுள்ளார்.
வழக்கு
வணிக கடற்படை அதிகாரியை கள்ள காதலர் உதவியுடன் கொலை செய்த மனைவி
முதலில் பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று 27 வயதான முஸ்கன், தனது கணவர் முன்னாள் வணிக கடற்படை அதிகாரியான சவுரப் ராஜ்புத்திற்கு, விஷம் கலந்த மதுவை கொடுக்க முயன்றார்.
இருப்பினும், சவுரப் அன்று மது அருந்தாமல் இருந்ததால் அவரது திட்டம் தோல்வியடைந்ததாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
பின்னர், மார்ச் 4 ஆம் தேதி தூக்கமாத்திரை கலந்த உணவை கொடுத்து, அவரை கொலை செய்துள்ளார்.
உத்தரபிரதேச அதிகாரிகள் நடத்திய சோதனையில், முஸ்கான் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தூக்க மாத்திரைகள் உட்பட மூன்று வகையான மருந்துகளை வாங்கியிருப்பதை உறுதிப்படுத்தினர் - ஒரு அமில நீக்கி, பதட்ட எதிர்ப்பு மருந்து மற்றும் ஒரு மிடாசோலம் ஊசி என்று அதிகாரி மேலும் கூறினார்.