Page Loader
மகா கும்பம்: மகாசிவராத்திரி அன்று 1-கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு
உத்தரபிரதேச அரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது

மகா கும்பம்: மகாசிவராத்திரி அன்று 1-கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2025
11:16 am

செய்தி முன்னோட்டம்

மகா கும்பமேளா நிறைவடையும் நேரத்தில், மகாசிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெறும் இறுதி அமிர்த ஸ்நானத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகா கும்பமேளாவின் கடைசி நாளில் ஏராளமான யாத்ரீகர்கள் வருவதை சமாளிக்க உத்தரபிரதேச அரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஜனவரி 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியதிலிருந்து, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் இதுவரை கிட்டத்தட்ட 64 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளா துவங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் ஐந்து அம்ரித் ஸ்னான்கள் நடந்துள்ளன - ஜனவரி 13, 14, 29, பிப்ரவரி 3 மற்றும் 12.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

உ.பி., மாநிலத்தில் அதிகரித்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, கும்பமேளா பகுதி முழுவதும் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது என காவல்துறை ஏற்க்கனவே தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே நியமிக்கப்பட்ட பார்க்கிங் பகுதிகளில் நிறுத்த அனுமதிக்கப்படும். இதற்கிடையில், பிரயாக்ராஜுக்குச் செல்லும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் வழித்தடங்களிலும் மோட்டார் சைக்கிள்களில் 40 காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சீரான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்துக்காக, மாற்றுப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜை இணைக்கும் ஏழு சாலை வழித்தடங்களில் கூடுதல் இயக்குநர் ஜெனரல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிலை அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள். கும்பமேளாவின் கடைசி நாள், மகாசிவராத்திரியுடன் இணைந்து வருவதால், நகரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களுக்கும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள், அங்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஏற்கனவே கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.