Page Loader
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பூர்வீக கிராமம் 'படேஷ்வர்' ஆன்மிக சுற்றுலாத்தலமாக மாறுகிறது
இதற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பூர்வீக கிராமம் 'படேஷ்வர்' ஆன்மிக சுற்றுலாத்தலமாக மாறுகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Jul 21, 2025
08:59 am

செய்தி முன்னோட்டம்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த ஊரான படேஷ்வர் கிராமம், முக்கிய ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்றுலா மையமாக மாற்றப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளான டிசம்பர் 24-ஆம் தேதி தேசிய அளவில் சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசும், பாஜகவும் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், அவரது பூர்வீகமான ஆக்ரா அருகே உள்ள படேஷ்வர் கிராமம் மேம்படுத்தப்படுகிறது. மாநில சுற்றுலாத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், மத்திய அரசின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட உள்ளது. அடல் பிஹாரி வாஜ்பாயின் பாரம்பரியம், ஆன்மிக மரபுகள் மற்றும் தேசிய நினைவுகள் இணையும் முக்கிய சுற்றுலா திட்டமாக இது அமைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புனிதத் தலம்

101 சிவன் கோயில்கள் உள்ள புனிதத் தலம்

படேஷ்வரில் 101 சிவன் கோயில்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவை உள்ளூர் மக்களிடையே அனைத்தும் நாகரா பாணியில் கட்டப்பட்டவை என்றும், அவை பிரதிஹாரா வம்சத்தினை சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. தல புராணங்களின்படி, இங்கு சிவபெருமான் ஒரு காலத்தில் ஆலமரத்தின் கீழ் தவம் செய்ததாக நம்பப்படுகிறது. இந்த இடத்துக்கு பிரமாண்டமான நுழைவு வாயில் அமைக்கப்படும். சாலை வசதிகள், அடிப்படை உள்கட்டமைப்புகள், சுற்றுலா தொடர்பான சேவைகள் போன்றவை மேம்படுத்தப்படும். தாஜ்மஹாலை காண வருவோர், அருகிலுள்ள படேஷ்வரையும் பார்வையிடும் வகையில் இந்த மேம்பாட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம், சம்பல் பள்ளத்தாக்கு மற்றும் யமுனை நதி பிரதேசம் போன்ற பகுதிகளும் சுற்றுலா வரைபடத்தில் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.