வழக்கு: செய்தி
ரூ.1.8 கோடி மோசடி வழக்கு: நடிகர் ஆர்யா மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்தது ஹைதராபாத் போலீஸ்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்யா மீது ரூ.1.80 கோடிக்கும் அதிகமான பண மோசடி மற்றும் குற்றவியல் மிரட்டல் விடுத்ததாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு புகார்: அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ராஜினாமா
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்? அவரே கொடுத்த விளக்கம்
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிரபலமான நடிகரும், அரசியல் விமர்சகருமான பிரகாஷ் ராஜை உடனடியாகக் கைது செய்யப் பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
நெல்லை கவின் கொலை வழக்கு: 9 மாதங்களுக்குப் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி சிபிசிஐடி போலீஸாரால் கைது!
நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முக்கியத் திருப்பமாகச் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரி சிபிசிஐடி போலீஸாரால் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, கடந்த மார்ச் 10 அன்று இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மர்மமான முறையில் காணாமல் போனார்.
போக்சோ வழக்கில் சிக்கிய மத்திய அமைச்சரின் மகன் நள்ளிரவில் அதிரடி கைது! 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சனிக்கிழமை (மே 16) இரவு தெலுங்கானா காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
ஆபீஸ் நெட்வொர்க்கில் ஆபாசமா? டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தின் கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு வாக்குமூலம்
பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் மகளிர் ஆணையத்தில் அளித்த வாக்குமூலம், டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தின் மிகவும் சீரழிந்த பணிச்சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சாத்தான்குளம் கொடூரம்: 9 போலீசாருக்கும் மரண தண்டனை அறிவிப்பு; தீர்ப்பின் முழுவிவரம்
தமிழக வரலாற்றில் காவல்துறையின் அத்துமீறலுக்கு மிக மோசமான சான்றாக அமைந்த சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் க்ளைம் நிராகரிப்பு செல்லாது! மருத்துவமனை விதிமீறலுக்குப் பாலிசிதாரர் பொறுப்பல்ல; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 63 வயதான இந்திரதத் பாண்டியா என்பவர், தான் எடுத்த மெடிக்கிளைம் பாலிசி நிராகரிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுதலை; விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழக அரசியலில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பேசப்பட்டு வந்த செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 2) தீர்ப்பை வழங்கியுள்ளது.
"சங்கீதா vs கீதம் உணவக வழக்கு" - தீர்ப்பை ஒத்திவைத்து சமரசத்திற்கு நீதிபதி யோசனை!
சென்னையில் மிகவும் பிரபலமான 'சங்கீதா' உணவகச் சங்கிலிக்கும், அதன் முன்னாள் உரிமையாளர்களால் நடத்தப்படும் 'கீதம்' உணவகத்திற்கும் இடையிலான வணிகமுத்திரை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.
யஷ் தயாளுக்கு என்னாச்சு? ஆர்சிபி டீம் பஸ்ஸில் முகம் மாயம்; பயிற்சியிலும் பங்கேற்கவில்லை; கிளம்பும் புதிய சர்ச்சைகள்
ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஜிஎஸ்டி மோசடி வழக்கில் பினோ வங்கி சிஇஓ ரிஷி குப்தா திடீர் கைது! ரூ.3,000 கோடி பெட்டிங் பின்னணி
பினோ பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் சிஇஓவுமான ரிஷி குப்தா, ஜிஎஸ்டி சட்ட விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஹைதராபாத் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து கெஜ்ரிவால், சிசோடியா விடுதலை! சிபிஐயை கடுமையாகச் சாடிய நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.
நீதிமன்றம் போலவே செட் போட்டு ஏமாற்றிய கும்பல்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.42 லட்சம் இழந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி
அகமதாபாத்தைச் சேர்ந்த 83 வயதான ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர், டிஜிட்டல் அரெஸ்ட் எனப்படும் நூதன சைபர் கிரைம் மோசடியில் சிக்கி 42.50 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.
'கறை நீங்கிவிட்டது, இனி நிம்மதியாக சாவேன்!' 20 ரூபாய் லஞ்ச வழக்கில் 30 ஆண்டுக்குப் பின் வென்ற காவலரின் சோக முடிவு
அகமதாபாத்தில் வெறும் 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாகத் தனது நேர்மையை நிரூபிக்கப் போராடி வந்த காவலர் பாபுபாய் பிரஜாபதி, வழக்கில் இருந்து விடுதலையான அடுத்த நாளே இயற்கை எய்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோதான் உயிரைப் பறித்ததா? கேரள வாலிபர் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்! பெண் சிக்கியது எப்படி? முழு விவரம்!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம் இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
டேராடூனில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான திரிபுரா மாணவர் உயிரிழப்புக்கு காரணம்: மருத்துவ அறிக்கையில் திடுக் தகவல்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த 24 வயது திரிபுரா மாணவர் ஏஞ்சல் சக்மா என்பவரின் மருத்துவ அறிக்கை திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
புஷ்பா 2 நெரிசல் வழக்கு: அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது ஹைதராபாத் போலீசார் சுமார் 100 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை: ரூ.27,000 கோடி அபராதம்
மலேசியாவின் மிகப்பெரிய நிதி முறைகேடு வழக்கான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தரப்பிரதேச இருமல் மருந்து வழக்கு: அமலாக்கத்துறை 3 மாநிலங்களில் 25 இடங்களில் அதிரடிச் சோதனை; முக்கியக் குற்றவாளி துபாயில் பதுங்கல்
உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதக் கோடீன் அடிப்படையிலான இருமல் மருந்து விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மூன்று மாநிலங்களில் உள்ள 25 இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டது.
நாட்டிலேயே முதல் முறை: வாக்காளர் பட்டியலில் தவறான விவரம் அளித்த குடும்பத்தின் மீது உ.பி.யில் வழக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) படிவங்களில் தவறான விவரங்களை அளித்ததாக ஒரு குடும்பத்தின் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக ரகசிய முறைகேடு வழக்கு: டிசிஎஸ்ஸிற்கு $194 மில்லியன் அபராதத்தை உறுதி செய்த அமெரிக்க நீதிமன்றம்
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்திற்கு எதிராக DXC டெக்னாலஜி தொடர்ந்த வர்த்தக ரகசியங்களை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில், அமெரிக்காவின் ஐந்தாவது சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Fifth Circuit Court of Appeals) $194 மில்லியன் (சுமார் ₹1,618 கோடி) இழப்பீட்டை நவம்பர் 21 ஆம் தேதி உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
மூன்று பேரும் குற்றவாளிகள்தான்; பவாரியா கும்பல் வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் தொடர்புடைய பவாரியா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் குற்றவாளிகள் எனச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தீர்ப்பளித்துள்ளது.
பொது இடங்களிலிருந்து தெரு நாய்களை முழுமையாக அகற்ற வேண்டும்; உச்ச நீதிமன்றம் உத்தரவு
நாட்டின் கல்வி நிறுவனங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், விளையாட்டு வசதிகள் போன்ற பொது இடங்களை ஒட்டிய பகுதிகளில் இருந்து தெரு நாய்களை முழுமையாக அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) உத்தரவிட்டுள்ளது.
அரசு நிறுவனங்களில் தெருநாய்களுக்கு ஆதரவளிக்கும் ஊழியர்கள்; நவம்பர் 7 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்குவதாக அறிவிப்பு
நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய்கள் பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
தெருநாய்கள் வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்யத் தவறிய தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் சம்மன்
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் இணக்க உறுதிமொழி ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தவறிய கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (அக்டோபர் 27) கடுமையான கண்டனம் தெரிவித்தது.
ஊழியர் தற்கொலை வழக்கில் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ மற்றும் மூத்த அதிகாரி மீது வழக்கு பதிவு
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரி சுப்ரதா குமார் தாஸ் ஆகியோர் மீது, நிறுவனத்தின் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்குத் தூண்டியதாகப் பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மேற்பார்வையிடும் முன்னாள் நீதிபதிக்கும் ஜல்லிக்கட்டுக்கு இப்படியொரு தொடர்பா? முழு விபரம்
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
சமையல் எரிவாயு டேங்கர் லாரி வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு
சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்கு, வாகனத்தைப் பறிமுதல் செய்யத் திட்டம்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் செப்டம்பர் 27 ஆம் தேதி மேற்கொண்ட பிரச்சாரங்களின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
உ.பி.யில் பயங்கரம்; ₹39 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்றோர், மனைவியை கொன்ற மகன் கைது
உத்தரப் பிரதேசத்தில் இன்சூரன்ஸ் தொகையாகக் கோடிக்கணக்கான ரூபாயைப் பெறுவதற்காகத் தனது பெற்றோர் மற்றும் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த நொய்டா இளைஞரின் கடத்தல் நாடகம்; சிக்கியது எப்படி?
நொய்டாவைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.4.7 லட்சத்தை இழந்த பிறகு, தனது குடும்பத்தினரிடம் இருந்து ரூ.20 லட்சத்தைப் பறிப்பதற்காகத் தன்னைத் தானே கடத்திக்கொண்டதாக நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது
மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
பணமோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்; ஆகஸ்ட் 5 அன்று ஆஜராக உத்தரவு
ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
உறுதியான ஆதாரங்கள் இல்லை; மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்தது என்ஐஏ நீதிமன்றம்
மும்பையில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம், 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட ஏழு குற்றவாளிகளையும் உறுதியான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுவித்தது.
இளம் பெண் மருத்துவர் புகார்; கேரள ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு
கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் என்ற மேடைப் பெயரால் பரவலாக அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி மீது, ஒரு இளம் மருத்துவர் அளித்த புகாரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், மகள் அர்ஷி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு
மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் பிரிந்து வாழும் மனைவி ஹாசின் ஜஹான் மற்றும் அவரது மகள் அர்ஷி ஜஹான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகரை திருமணம் செய்து ஏமாற்றிய நிகிதா? தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் குற்றச்சாட்டு
திருபுவனம் காளி கோயில் காவலர் அஜித் குமார் கொலை வழக்கில் ஒரு பரபரப்பான திருப்பமாக, வழக்குடன் தொடர்புடைய நகைகள் காணாமல் போனதாக கூறப்படும் முக்கிய புகார்தாரரான நிகிதா மீது தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பதிலளிக்க தாமதம்; சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்
பிரபல தமிழ் சினிமா நடிகர் வடிவேலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில், சக நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.2,500 அபராதம் விதித்து, அந்தத் தொகையை வடிவேலுவுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.
பழங்குடி மக்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஃப்ஐஆர் பதிவு
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் வழக்கில் செந்தில்பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2021 மற்றும் 2023க்கு இடையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த மனு தொடர்பாக, முன்னாள் தமிழக அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
LGBTQIA உரிமைகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், இந்தியாவில் அவர்களின் திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், ஒரே பாலின தம்பதிகள் ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி சென்னை மகிளா நீதிமன்றம் மிகவும் தீர்ப்பை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன?
பாலிவுட் நடிகையும், ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற அணி நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய அசாதாரண பொதுக் கூட்டம் (EGM) தொடர்பாக சக இயக்குநர்கள் மோஹித் பர்மன் மற்றும் நெஸ் வாடியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பொதுமக்கள் எதிர்ப்பால் ஹவுஸ் அரெஸ்ட் நிகழ்ச்சிக்காக மன்னிப்பு கோரியது உல்லு ஆப்
பொதுமக்கள் விமர்சனம் மற்றும் பஜ்ரங் தளத்தால் அளிக்கப்பட்ட முறையான புகாருக்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் அஜாஸ் கான் தொகுத்து வழங்கிய சர்ச்சைக்குரிய ரியாலிட்டி ஷோவான ஹவுஸ் அரெஸ்டின் அனைத்து அத்தியாயங்களையும் உல்லு ஆப் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான 35 வழக்குகள் குறித்து டிஜிபி அறிக்கை
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான ஞானசேகரன் மீதான சட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் விரிவான 17 பக்க அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
சாம்சங், எல்ஜி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு; மின் கழிவு மறுசுழற்சி கொள்கையில் என்ன சிக்கல்?
தென் கொரிய மின்னணு நிறுவனங்களான சாம்சங் மற்றும் எல்ஜி, மின்னணு கழிவு (மின் கழிவு) மறுசுழற்சி செய்பவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட கொள்கை முடிவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன.