
தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மு.க.அழகிரி விடுதலை: நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
மதுரையில் தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரை விடுதலை செய்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுப்பப்பட்டது.
இதனையடுத்து விசாரணை நடத்த சென்ற மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்துவை, அழகிரி தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது
இதனால் மு.க.அழகிரிக்கு எதிராக அவர் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு, 12 ஆண்டுகள் கழித்து இன்று வெளியானது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மு.க.அழகிரி விடுதலை
#BREAKING || 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு
— Thanthi TV (@ThanthiTV) February 16, 2024
மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி தீர்ப்பு#tamilnadu #mkalagiri #Elections pic.twitter.com/4aRbEHex18