Page Loader
காதலித்து ஏமாற்றியதாக நடிகர் 'காதல்' சுகுமார் மீது வழக்கு பதிவு
நடிகர் 'காதல்' சுகுமார் மீது வழக்கு

காதலித்து ஏமாற்றியதாக நடிகர் 'காதல்' சுகுமார் மீது வழக்கு பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 10, 2025
05:57 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் சுமார் 50 படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் நடிகர் 'காதல்' சுகுமார். இவர் மீது துணை நடிகை ஒருவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதை கூறி ஏமாற்றிவிட்டார் என அந்த துணை நடிகை தெரிவித்துள்ளார். அந்த புகாரில்,"நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி, கடந்த மூன்று ஆண்டுகளாக என் நகை, பணம் போன்றவற்றை என்னிடம் ஏமாற்றி பெற்றுக் கொண்டார். தற்போது, எனக்கு ஏற்கனவே திருமணம் செய்யப்பட்டது என்று கூறி, என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றப் பார்க்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

பின்னணி

காதல் படம் மூலம் பிரபலமடைந்த சுகுமார்

சுகுமார், 1997 ஆம் ஆண்டு 'சக்தி' என்கிற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். அதன் பின்னர் விருமாண்டி, வசூல் ராஜா MBBS உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவரை பிரபல படுத்தியது காதல் திரைப்படமே. அதன் பின்னரே அவர் 'காதல்' சுகுமார் என குறிப்பாக அழைக்கப்படுகிறார். இது தவிர அவர் இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். 2015-ஆம் ஆண்டு வெளியான 'திருட்டு VCD' என்ற திரைப்படமும், 2016-ஆம் ஆண்டு வெளியான 'சும்மாவே ஆடுவோம்' என்ற படமும் இவர் இயக்கத்தில் வந்தவையே. எனினும் அவை தோல்வியையே சந்தித்தன.