க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது
இந்த வார க்ரைம் ஸ்டோரி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 56 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் 13 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட ஃபிர்தௌஸ் அலி, அப்பெண்ணை வேலை வாங்கி தருவதாக கூறி இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். "கொச்சியில் வேலை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த 56 வயது பெண்ணை, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஆட்டோவில் அழைத்துச் சென்று, ரயில்வே யார்டு அருகே உள்ள சதுப்பு நிலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்" என போலீசார் கூறியுள்ளனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி கைது
"பாதிக்கப்பட்ட பெண்ணை அப்பகுதி மக்கள் புதர்களுக்குள் இருந்து மீட்டனர். பலத்த ரத்த வெள்ளத்தில் காணப்பட்ட அவர், எர்ணாகுளத்தில் உள்ள, களமச்சேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது" என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் தீவிர விசாரணைக்கு பின்னர், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் கடவந்தரா காவல்துறையினர் கூறினர். ஃபிர்தௌஸ் அலி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், போதை மருந்துகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.