கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார வழக்கு பதிவு
செக்ஸ் டேப் முறைகேடு வழக்கில் ஜேடி(எஸ்) எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ரேவண்ணாவிற்கு எதிரான இரண்டாவது வழக்கு ஆகும். இந்த வழக்கினை கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தாக்கல் செய்துள்ளது. ஐபிசி பிரிவு 376ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிரிவு 376(2) (N) (தொடர்ந்து பலாத்காரம் செய்தல்), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), 354A(1)(ii), மற்றும் 354(C) (நிர்வாண அல்லது அரை நிர்வாணப் படங்களைப் பதிவேற்றுதல்), மற்றும் IT சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், ஜேடி(எஸ்) கட்சித் தலைவருமான எச்.டி.தேவே கவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா, எப்ஐஆரில் ஒரே குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார்
ஜெர்மனிக்கு தப்பித்த ரேவண்ணா; கையை விரித்த வெளியுறவுத்துறை அமைச்சகம்
பிரஜ்வல் ரேவண்ணா டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டில் ஜெர்மனிக்கு பயணம் செய்ததாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அவர் வெளி நாட்டிற்கு பயணம் செய்வது தொடர்பாக MEA யிடமிருந்து "அரசியல் அனுமதி எதுவும்" கோரப்படவில்லை அல்லது வெளியிடப்படவில்லை என்று அமைச்சகம் மேலும் கூறியது. பிரஜ்வாலின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும், ராஜதந்திர வழிகள் மூலம் அவர் திரும்புவதற்கு ஆவண செய்யவும் மத்திய அரசை வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது. முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது, அவர்களது வீட்டில் பணிபுரியும் பெண் ஒருவர் அளித்த புகாரினை தொடர்ந்து வழக்கு விஸ்வரூபம் எடுத்தது.