LOADING...
குறைந்தது பவுன் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
தங்க விலை, செவ்வாய்கிழமை குறைந்ததுள்ளது

குறைந்தது பவுன் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
May 05, 2026
10:48 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, செவ்வாய்கிழமை (மே 5) குறைந்ததுள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹180 குறைந்து ₹13, 820 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,440 குறைந்து ₹1, 10, 560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹196 குறைந்து ₹15,077 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1, 568 குறைந்து ₹1, 20, 616 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை குறைந்துள்ளது

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று (மே 5) குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹150 குறைந்து ₹11,530 ஆகவும், ஒரு சவரன் ₹1200 குறைந்து ₹93,440 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹255.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,55,000 ஆகவும் விற்பனை ஆகிறது. அமெரிக்கா - ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், சர்வதேச சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement