நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான்
செய்தி முன்னோட்டம்
நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியதற்காக, கடும் கண்டனங்களை சந்தித்த மன்சூர் அலிகான், அதன் தொடர்ச்சியாக மகளிர் ஆணையம் தொடர்ந்த வழக்கையும் சந்தித்து வருகிறார்.
இந்த விவகாரத்தில், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பலரும் அவரை மன்னிப்பு கேட்க சொல்லி தொடர்ந்து வலியுறுத்தவே, இரு தினங்களுக்கு முன்னர்,"என்னுடைய சக நடிகையே..என்னை மன்னித்துவிடு' என த்ரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இந்த பிரச்னை இதோடு ஓயவில்லை போலும். தற்போது, அவர், த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது, கிரிமினல் மற்றும் பொதுஅமைதியை சீர்குலைத்ததற்காக நாளை வழக்கு பதியவிருப்பதாக கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மன்சூர் அலிகான்-த்ரிஷா விவகாரம்
#JUSTIN | "மூவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன்" - மன்சூர் அலிகான் #MansoorAliKhan | #Trisha | #Kushbu | #Chiranjeevi pic.twitter.com/IlYydSpcpO
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 26, 2023