
சவுக்கு சங்கர் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு: மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்
செய்தி முன்னோட்டம்
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை.
இதற்கான ஆவணங்களை, கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சமர்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த மே 4ஆம் தேதி, பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 (பி) (ஆபாசமான செயல்கள்), 509 (ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட செயல்), 354 டி (பின்தொடர்தல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சவுக்கு சங்கர் வழக்கு
#JUSTIN |கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சவுக்கு சங்கரை கைது செய்வதற்கான ஆவணங்களை கொடுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்
— Thanthi TV (@ThanthiTV) May 9, 2024
சவுக்கு சங்கர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், புதிதாக 2 வழக்குகள் பதிவு
இந்த வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்னை… pic.twitter.com/oLonatmcmo