செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு பறந்த உத்தரவு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஆனால், செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால், முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கை 3 மாதத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம். செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு ஏற்கனவே 3 முறை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், 2 முறை உயர்நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர்.