NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வங்கதேசம்: ISKCON துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் அடுத்த மாதம் வழக்கு ஒத்திவைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வங்கதேசம்: ISKCON துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் அடுத்த மாதம் வழக்கு ஒத்திவைப்பு
    ISKCON துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் வழக்கு ஒத்திவைப்பு

    வங்கதேசம்: ISKCON துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் அடுத்த மாதம் வழக்கு ஒத்திவைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 03, 2024
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ISKCON கோவில் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் எந்த வழக்கறிஞர்களும் இன்று ஆஜராகாததையடுத்து அவரது வழக்கு விசாரணை ஜனவரி 2ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகு, அந்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    இதனை எதிர்த்து, வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் போராட்டங்களை முன்னெடுத்தது.

    இந்த இயக்கத்தின் செய்தித்தொடர்பாளராக இருந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் 25-ஆம் தேதி டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

    தாக்குதல்

    வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல்

    தொடர்ந்து, சின்மோய் கிருஷ்ண தாஸ் வழக்கில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி சட்டோகிராம் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது.

    அதன் பிறகு, அவரின் வழக்கறிஞர்கள் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் அதற்கு விசாரணை நடைபெறவில்லை.

    இதற்கிடையே சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையில் ஒரு வழக்கறிஞர் உயிரிழந்தார்.

    இதனால் வழக்கறிஞர்கள் சங்கம் சின்மோயின் வழக்கில் ஆஜராக தடை விதித்தது.

    இந்நிலையில், சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக செயல்பட்ட ராமன் ராய் என்ற வழக்கறிஞர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரம் தாஸ் கூறியுள்ளார்.

    கிருஷ்ண தாஸ் வழக்கில் ஆதரவாக உள்ள வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசிடம் இஸ்கான் கோரிக்கை வைத்துள்ளது.

    ஒத்திவைப்பு

    வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகாததால் வழக்கு ஒத்தி வைப்பு

    இந்த நிலையில், இன்று சட்டோகிராம் நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை.

    இதையடுத்து, நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 2-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    17 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசத்தில், சிறுபான்மை இந்துக்கள் 8 சதவீதமாக உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 200க்கும் மேற்பட்ட இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்துள்ளன.

    இந்திய வெளியுறவு அமைச்சகம், சிறுபான்மையினரை பாதுகாக்க வங்கதேச அரசுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    வழக்கு

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    பங்களாதேஷ்

    அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம்  உலகம்
    பங்களாதேஷ் அகதிகளுக்கு மேற்கு வங்கம் அடைக்கலம் தரும் என்று அறிவித்தார் மம்தா பானர்ஜி  மேற்கு வங்காளம்
    மம்தா பானர்ஜியின் அடைக்கல வாக்குறுதி, 'பயங்கரவாதிகளை ஈர்க்கக்கூடும்' என்று பங்களாதேஷ் கவலை மம்தா பானர்ஜி
    வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் பலி; இந்தியர்களுக்கு எச்சரிக்கை போராட்டம்

    வழக்கு

    நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான்
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை
    திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம் மன்சூர் அலிகான்
    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025