புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஜான்சன் & ஜான்சனுக்கு எதிராக வழக்கு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழு ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் (ஜே&ஜே) க்கு எதிராக ஒரு வழக்கைத் தொடுத்துள்ளது. நியூ ஜெர்சி ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, பல வழக்குகளைத் தீர்க்க ஷெல் நிறுவனத்தின் திவால்நிலையை மோசடியாகப் பயன்படுத்தியதாக J&J நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டுகிறது. இந்த வழக்குகள் ஜே&ஜேயின் பவுடர் தயாரிப்புகளில் அஸ்பெஸ்டாஸ் உள்ளது என்று கூறுகிறது, இது புற்றுநோயை உண்டாக்ககூடிய கெமிக்கல் ஆகும். ஜே&ஜே மீது, அதன் டால்க் தயாரிப்புகள் தொடர்பாக வழக்குத் தொடுத்த 50,000க்கும் மேல் இருக்கும் நபர்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் ஐந்து வாதிகள், இந்த முன்மொழியப்பட்ட வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
வாதிகள் ஜே & ஜேயின் திவால் உத்தியை மோசடி என்று விவரிக்கின்றனர்
ஜே & ஜேக்கு எதிரான பவுடர் வழக்குகளில் பெரும்பாலானவை கருப்பை புற்றுநோயால் கண்டறியப்பட்ட பெண்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மற்ற நிகழ்வுகள் மீசோதெலியோமாவால் பாதிக்கப்பட்ட நபர்களை உள்ளடக்கியது. இதுவும் அஸ்பெஸ்டாஸ் வெளிப்பாட்டுடன் தொடர்புடைய ஒரு கொடிய புற்றுநோயாகும். ஜே&ஜேயின் திவால் உத்தியானது, பில்லியன் கணக்கான டாலர்களை வாதிகளுக்கு வழங்கப்படவேண்டிய இழப்பீட்டை எட்டாக்கனி ஆக்கிவிட்டது என்று வாதிகள் வாதிடுகின்றனர். மேலும் ஜே&ஜே நிறுவனம், இந்தப் பெண்களைத் தடுக்கவும், தாமதப்படுத்தவும், ஏமாற்றவும் மற்றும் அவர்கள் நீதிமன்றத்தினை நாடுவதை தடுக்கவும்முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜே&ஜேயின் திவால் உத்தி தோல்வியடைந்தது
2021ஆம் ஆண்டில், ஜே&ஜே தனது பவுடர் பொறுப்புகளை ஒரு புதிய துணை நிறுவனத்திற்கு மாற்ற "டெக்சாஸ் டூ-ஸ்டெப்" எனப்படும் கார்ப்பரேட் உத்தியைப் பயன்படுத்தியது. இந்த நடவடிக்கையானது ஜே&ஜேவுக்கு எதிரான வழக்குகளை திவால்நிலைக்கு தாய் நிறுவனமே தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் திறம்பட நிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், ஜே&ஜே அல்லது அதன் துணை நிறுவனமோ, நிதி நெருக்கடியில் இல்லை. இதனால் திவால்நிலைக்கு தகுதியற்றது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்ததால், வழக்கைத் தீர்ப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தது. இரண்டாவது முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, 6.48 பில்லியன் டாலரின் பவுடர் தீர்வை ஆதரிக்க போதுமான வாக்குகளைப் பெற்றவுடன், மூன்றாவது திவால்நிலையைத் தொடர திட்டமிட்டுள்ளதாக மே 1 அன்று J&J அறிவித்தது.