உத்தரப்பிரதேசம்: செய்தி

09 Jan 2024

அயோத்தி

ஜனவரி 17ஆம் தேதி நடக்க இருந்த அயோத்தி ராமர் சிலையின் ஊர்வலம் ரத்து 

ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஜனவரி 17ஆம் தேதி நடக்க இருந்த அயோத்தி ராமர் சிலையின் ஊர்வலத்தை ரத்து செய்துள்ளது.

31 Dec 2023

அயோத்தி

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: QR குறியீடு நன்கொடை மோசடி குறித்த எச்சரிக்கை

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், பக்தர்களை ஏமாற்றும் வகையில் நடக்கும் QR குறியீடுகள் மோசடி குறித்து வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு மாதத்திற்கு பின்னர், பனாரஸ் ஐஐடி மாணவி வல்லுறவு வழக்கில் மூவர் கைது

உத்திரபிரதேசத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரியில், இரண்டு மாதத்திற்கு முன்னர் மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம்

உத்திரப்பிரதேசத்தில் பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக எண்ணெய் அலையில் பணியாற்றி வந்த 18 வயது தலித் சிறுமி, எண்ணெய் கொப்பரையில் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29 Dec 2023

டெல்லி

வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டத்தால், இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் பணிமூட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் நிலையில், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி

ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி

அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

26 Dec 2023

இந்தியா

வீடியோ: 12 மணி நேரமாக உத்தரப்பிரதேசத்திற்குள் சுற்றி திரிந்த புலி 

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து தப்பி சென்ற புலி ஒன்று 12 மணி நேரத்துக்குப் பிறகு இன்று வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.

மத்திய அரசின் வரி பகிர்வு - தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கும் மாதாந்திர வரிப்பகிர்வில் கூடுதல் தவணை தொகையாக ரூ.72.961.21 கோடி முன்னதாகவே விடுவிக்கப்பட்டுள்ளது.

"மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" - முன்னாள் தலைவரின் உதவியாளர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிறகு சாக்ஷி மாலிக் அறிவிப்பு

முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங், அக்கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட சிறிது நேரத்தில், மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.

வீடியோ: வாரணாசி ரோட்ஷோவின் போது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற பிரதமர் மோடியின் வாகனங்கள் 

இன்று வாரணாசியில் நடந்த ரோட்ஷோவின் போது, ஒரு ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக தனது கான்வாய் வாகனங்களை நிறுத்தினார் பிரதமர் மோடி. அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் பதிப்பை வாரணாசியில் உள்ள 'நமோ காட்' என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டிசம்பர் 17 முதல் 30 வரை இந்த கலாச்சார விழா நடைபெற இருக்கிறது.

"உயிரை மாய்த்து கொள்ள அனுமதி வேண்டும்": உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண் நீதிபதி

உத்தரபிரதேச பெண் நீதிபதி ஒருவர், அம்மாநிலத்தில் உள்ள பாரபங்கி என்ற இடத்தில் பதவியில் இருந்தபோது, ​​தனக்கு நேர்ந்த பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலைத் தொடர்ந்து, தற்கொலை செய்துகொள்ள தலைமை நீதிபதியின் அனுமதியை கேட்டுள்ள சம்பவம், நீதிபதிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணர் ஜென்மபூமி வழக்கு: மதுராவில் உள்ள மசூதியை ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒப்புதல்

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகில் உள்ள ஷாஹி இத்கா மசூதி வளாகத்தை நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

13 Dec 2023

பாஜக

Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?

ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும்

நான்கு வருடங்களுக்கு முன்னர் அயோத்தி ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழி வகுத்ததை தொடர்ந்து, முதல் கட்ட பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

10 Dec 2023

தேர்தல்

தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி மேலாளரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை(28) அரசியல் வாரிசாக அறிவித்தார்.

'திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றமில்லை': நீதிமன்றம் 

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

10 Dec 2023

விபத்து

உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து: 1 குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி 

உத்தரபிரதேச மாநிலம் போஜிபுரா அருகே பரேலி-நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று இரவு டிரக் மோதியதால் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

06 Dec 2023

கொலை

கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை

இந்தியாவில் கடந்த ஆண்டு பதிவான கொலைகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

30 Nov 2023

இந்தியா

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம்

உத்தர பிரதேசம்: ஞானவாபி மசூதி வளாகத்தில் கிடைத்த கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் மேலும் 10 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

30 Nov 2023

இந்தியா

உலகிலேயே மிக நீளமான கூந்தல் - இந்திய பெண் கின்னஸ் சாதனை 

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்னும் சாதனையினை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் 21 நாட்கள் கால அவகாசம் கோரும் தொல்லியல் துறை

ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், இந்திய தொல்லியல் துறை(ASI) மேலும் மூன்று வாரங்கள் கால அவகாசம் கோரியுள்ளது.

27 Nov 2023

உள்துறை

குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு 

குடியுரிமை(திருத்தம்) சட்டத்தின்(CAA) இறுதி வரைவு அடுத்த ஆண்டு மார்ச் 30 க்குள் தயாராக இருக்கும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நேற்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில், நவம்பர் 25 'அசைவமில்லா நாள்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது; அதற்கான காரணம்?

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலானஅரசு, சாது டி.எல்.வாஸ்வானியின் பிறந்தநாளான நவம்பர் 25ஆம் தேதியை "அசைமில்லாத நாள்" என்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு 

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இதன் பகுதியருகே அமைந்துள்ளது ஞானவாபி மசூதி.

20 Nov 2023

பீகார்

சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது?

வட மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் நேபாளத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகள் ஒன்றான சத் பூஜை, கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி தொடங்குகிறது.

உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம்

உத்தரப்பிரதேசம் வழியே சென்ற டெல்லி-சஹர்சா வைசாலி விரைவு ரயிலானது இன்று(நவ.,16)அதிகாலை சென்று கொண்டிருந்தது.

15 Nov 2023

விபத்து

உத்தரப்பிரதேச பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து 

உத்தரப்பிரதேசம் மாநிலம் பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

15 Nov 2023

வணிகம்

சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் காலமானார் 

இந்தியா: சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய்(75), நீண்டகால உடல்நலக்குறைவுக்குப் பிறகு நேற்று மரணமடைந்தார்.

ஆக்ரா ஹோட்டலில் பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது: வைரலாகும் வீடியோ 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் பெண் ஊழியர் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ததற்காக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 Nov 2023

விபத்து

மதுரா பட்டாசு சந்தையில் பயங்கர தீவிபத்து: பலர் காயம்

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோபால்பாக் பகுதியில் இருக்கும் பட்டாசு சந்தையில் இன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர் மற்றும் ஏழு கடைகள் எரிந்து சாம்பலாயின.

07 Nov 2023

இந்தியா

மீண்டும் ஒரு உத்தர பிரதேச நகரத்தின் பெயர் மாற்றம்: 'ஹரிகார்' ஆகிறது 'அலிகார்'

அலகாபாத்திற்கு அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் உள்ள மற்றொரு முக்கிய நகரத்தின் பெயர் மாற்றப்பட இருக்கிறது.

03 Nov 2023

ஐஐடி

மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஐஐடி-பிஹெச்யு (IIT-Bhu) கல்லூரிக்குள் புகுந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், மாணவியை முத்தமிட்டு, நிர்வாணப்படுத்தியதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

01 Nov 2023

தீபாவளி

இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

தீபங்களின் ஒளியான தீபாவளி பண்டிகையை, தமிழர்களாகிய நாம் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறோம்.

01 Nov 2023

டெல்லி

அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் 

நவம்பர் 1 முதல், மின்சார, சிஎன்ஜி மற்றும் பிஎஸ் VI-க்கு உட்பட்ட டீசல் பேருந்துகள் மட்டுமே டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள நகரங்களுக்கு இடையே செயல்பட அனுமதிக்கப்படும்.

31 Oct 2023

சென்னை

சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை

இந்தியா மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நடக்கும் சாலை விபத்து மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரங்களை சேகரித்து புள்ளி விவரங்களை வெளியிடும்.

க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம் 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்ய சென்றவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலுக்கு இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்கலாம்- மத்திய அரசு அனுமதி

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு, இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.

சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கேன்டீன் பணியாளர், எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான 17 இடங்கள் காலியாக இருந்தது.