LOADING...
அயோத்தி ராமர் கோவிலுக்கு இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்கலாம்- மத்திய அரசு அனுமதி
அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் வெளிநாட்டில் இருந்து நீதி பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின், FCRA உரிமம் பெற்று வெளிநாட்டில் வாழ்பவர்களிடம் நன்கொடை திரட்டலாம்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்கலாம்- மத்திய அரசு அனுமதி

எழுதியவர் Srinath r
Oct 18, 2023
06:28 pm

செய்தி முன்னோட்டம்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு, இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA), 2010, கீழ் மத்திய அரசு, ராமர் கோவிலை கட்டி வரும் அறக்கட்டளையான, 'ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை'க்கு வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற உரிமம் வழங்கி உள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்த அறக்கட்டளை, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசு உரிமம் வழங்கி உள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து நன்கொடை அளிப்பவர்கள், குறிப்பிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு மட்டும் அளிக்க வேண்டும் எனவும் அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

நிதி அளிப்பதற்கான வங்கி கணக்கு விவரங்களை ராமர் கோவில் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது