Page Loader
உத்தரப்பிரதேச பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து 
உத்தரப்பிரதேச பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து

உத்தரப்பிரதேச பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து 

எழுதியவர் Nivetha P
Nov 15, 2023
08:08 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் வழியே சென்ற டெல்லி-தர்பங்கா விரைவு ரயில் எட்டவா அருகே செல்கையில் ரயிலின் 3 பெட்டிகளில் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது. ரயிலில் தீ பிடித்ததை அறிந்த பயணிகள் அதிலிருந்து தப்பிக்க வெளியே குதித்துள்ளனர் என்று தெரிகிறது. இதனால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரயில் பெட்டிகள் தீ பிடித்து எரிவது தெரிந்து ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரும் அங்கு சென்று விபத்து குறித்த காரணம் என்ன என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

ரயிலில் தீ விபத்து