
மதுரா பட்டாசு சந்தையில் பயங்கர தீவிபத்து: பலர் காயம்
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோபால்பாக் பகுதியில் இருக்கும் பட்டாசு சந்தையில் இன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர் மற்றும் ஏழு கடைகள் எரிந்து சாம்பலாயின.
இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரு பட்டாசு கடையில் தொடங்கிய தீ வேகமாக மற்ற 6 கடைக்கும் பரவியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது" என்று ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (எஸ்எச்ஓ) அஜய் கிஷோர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
சம்பவத்தின் போது எடுக்கபட்ட வீடியோ
VIDEO | Fire breaks out at a market in Mathura, Uttar Pradesh. More details awaited. pic.twitter.com/KNVqtRg8IG
— Press Trust of India (@PTI_News) November 12, 2023