இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
செய்தி முன்னோட்டம்
தீபங்களின் ஒளியான தீபாவளி பண்டிகையை, தமிழர்களாகிய நாம் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறோம்.
ஆனால் இந்தியா முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களில் தீபாவளி வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் மகிழ்ச்சியின் இப்பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
வட இந்தியா- வட இந்தியாவில் ராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்கு மனைவி சீதா மற்றும் தம்பி லட்சுமணன் உடன் திரும்பி வரும் நாளை தீபாவளி ஆகக் கொண்டாடுகிறார்கள்.
உத்திரபிரதேசம்- இந்த விடுமுறையை உத்தரபிரதேச மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுவார்கள். வாரணாசி உள்ளிட்ட புனித கங்கைக் கரைகள் விழாக்கோலம் கொள்ளும். அர்ச்சகர்கள் கரைகளில் மந்திரங்களை ஓதும்போது, கங்கை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
2nd card
இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது- 2
பஞ்சாப்- பஞ்சாபிகளுக்கு தீபாவளி விடுமுறை எதிர்வரும் பணிக்காலம் தொடங்கும் விடுமுறையாகிறது. பஞ்சாபி சிங்குகள் குருத்வாரா சென்று வழிபடுவார்கள். அங்குள்ள இந்துக்கள், தீபாவளி அன்று லட்சுமியை வழிபடுவார்கள்.
கர்நாடக- கர்நாடகா மக்கள் அஸ்விஜா கிருஷ்ண சதுர்தசி மற்றும் பாலி பத்யமி ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க விடுமுறை நாட்களைக் தீபாவளி சமயத்தில் கொண்டாடுகிறார்கள்.
அஸ்விஜா கிருஷ்ண சதுர்தசி அன்று மக்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பர். மேலும் பசுவின் சாணத்தால் கோட்டை கட்டி பாலி பாத்யமி அன்று பாலி மன்னன் மன்னன் குறித்த கதைகளை கூறி மகிழ்வர்.
தமிழ்நாடு- ஐப்பசி மாதம் அமாவாசை அன்று தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, அண்டை வீட்டாருடன் இனிப்புகள் பரிமாறி, பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்.
3rd card
இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது- 2
ஆந்திர பிரதேசம்- ஒவ்வொரு தீபாவளி என்றும் ஆந்திராவில் உள்ள மக்கள், சத்தியபாமாவின் மண்ணால் செய்யப்பட்ட சில இடம் பிரார்த்தனை செய்வார்கள்.
மகாராஷ்டிரா- மராத்தியர்கள் தீபாவளியை நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு கொண்டாடுவது வழக்கம். தீபாவளி என்று மராத்தியர்கள் பிரத்தியேக உணவான 'ஃபாரல்' சமைத்து சாப்பிட்டு கொண்டாடுவார்கள்.
குஜராத்- வர்த்தகம் அதிகமாக நடைபெறும் குஜராத் மாநிலத்தில் தீபாவளியை, செல்வ செழிப்பு அதிகரிக்க கொண்டாடுகிறார்கள். அன்று லட்சுமியை அவர்கள் வணங்குகிறார்கள்.
மேற்கு வங்கம்- மேற்கு வங்கத்தில் தீபாவளியை காளி பூஜையாக மக்கள் கொண்டாடுகிறார்கள். காளி தேவிக்கு மீன், செம்பருத்தி உள்ளிட்டவற்றை படையலிட்டு விடிய விடிய மக்கள் வழிபடுவார்கள்.
ஒடிசா- இம் மாநிலத்தில் மக்கள் தீபாவளி என்று மறைந்த மூதாதையர்களுக்கு சணல் குச்சிகளை எரித்து அஞ்சலி செலுத்துவார்கள்.