வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம்
செய்தி முன்னோட்டம்
டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டத்தால், இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் பணிமூட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் நிலையில், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. பனிமூட்டத்தால், அதிகபட்சம் 150 மீட்டருக்கு மேல் காட்சி தெளிவாக இல்லாததால், டெல்லி மார்க்கமாக செல்லும் 11 ரயில்களும், 10 முதல் 12 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. ஜனவரி 2ம் தேதி வரை பணிமூட்டம் தொடரும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஹரியானா, டெல்லிக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை 31ஆம் தேதி வரை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2nd card
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி ஆக பதிவு
டெல்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இது வியாழக்கிழமை 8.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் தலைநகர் டெல்லியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு, 10 டிகிரி செல்சியஸிற்கும் குறைவான வெப்பநிலையே தொடரும் என கணித்துள்ளது. கௌதம் புத்த நகர் - நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவை உள்ளடக்கிய பகுதிகளில், பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரப்பிரதேசத்தில் பணிபுரிவால் ஏற்பட்ட இரு வெவ்வேறு வாகன விபத்தில், குறைந்தது ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.