உத்தரப் பிரதேசத்தில், நவம்பர் 25 'அசைவமில்லா நாள்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது; அதற்கான காரணம்?
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலானஅரசு, சாது டி.எல்.வாஸ்வானியின் பிறந்தநாளான நவம்பர் 25ஆம் தேதியை "அசைமில்லாத நாள்" என்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அதன்படி, அனைத்து இறைச்சிக் கூடங்களும், இறைச்சிக் கடைகளும் இன்று, நவம்பர் 25 மூடப்படும்.
மாநிலம் முழுவதும் இந்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின்படி, "அஹிம்சைக் கோட்பாட்டை முன்வைத்த நம் தேசத்தின் மாமனிதர்களின் பிறந்தநாள் 'அகிம்சை' தினங்களாகக் கொண்டாடப்படுகிறது என்பதைத் தெரிவிக்கிறோம். மகாவீர் ஜெயந்தி, புத்த ஜெயந்தி, காந்தி ஜெயந்தி வரிசையில், சாது டி.எல். வாஸ்வானி ஜெயந்தியை நாம் கொண்டாடும் நிலையில், உ.பி., அரசு, மாநிலத்தில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூடி வைக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
card 2
யார் இந்த டி.எல். வாஸ்வானி?
மீரா இயக்கத்தைத் தொடங்கிய கல்வியாளர், சாது தன்வர்தாஸ் லீலாராம் வாஸ்வானி. இவர், நவம்பர் 25, 1879 இல் பிறந்தார்.
ஹைதராபாத்தில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) உள்ள சிந்து மாகாணத்தில், ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார்.
நாட்டில் பெண்களின் கல்வி மற்றும் விடுதலைக்காக குரல் எழுப்பிய சீர்திருத்தவாதி இவர். திறமையான பேச்சாளர் மற்றும் எழுத்தாளராக அறியப்பட்ட வாஸ்வானி சைவ வாழ்க்கை முறையை பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
வாஸ்வானி, ஜனவரி 16, 1966 அன்று தனது 86வது வயதில் இறந்தார்.
புனேவில், அவரது வாழ்க்கை மற்றும் படிப்பினைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் சமீபத்தில் திறக்கப்பட்டது.
அவரின் நினைவாக நவம்பர் 25 அன்று சாது வாஸ்வானியின் பிறந்தநாள் சர்வதேச இறைச்சியற்ற தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.