அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி
செய்தி முன்னோட்டம்
அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், விழாவிற்கு பிரதிநிதிகளை அனுப்புவதற்கு எதிராக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், பாஜகவின் அரசியல் கொள்கைக்குள் இழுக்கப்படுவதற்கு எதிராக கட்சி கவனமாக இருப்பதாக, கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கும்பாபிஷேக விழாவிற்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளையினர், இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
2nd card
விழாவை புறக்கணித்த சிபிஎம்
முன்னதாக ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை புறக்கணிப்பதாக அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "மதம் என்பது அரசியல் ஆதாயத்திற்கான ஒரு கருவியாக மாற்றப்படக்கூடாது அது தனிப்பட்ட விருப்பம்" என தெரிவித்தார்.
மேலும் அவரின் கட்சி, மத நிகழ்வுகளை அரசு செலவில் நடத்துவதற்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் 6,000க்கும் மேற்பட்டோர் பிரமாண்டமான "பிரான் பிரதிஸ்தா" விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.