Page Loader
வீடியோ: 12 மணி நேரமாக உத்தரப்பிரதேசத்திற்குள் சுற்றி திரிந்த புலி 

வீடியோ: 12 மணி நேரமாக உத்தரப்பிரதேசத்திற்குள் சுற்றி திரிந்த புலி 

எழுதியவர் Sindhuja SM
Dec 26, 2023
02:00 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து தப்பி சென்ற புலி ஒன்று 12 மணி நேரத்துக்குப் பிறகு இன்று வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது. அந்த புலி எந்த பயமும் இல்லாமல் ஒரு சுவற்றின் மேல் உட்கார்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு, புலியை சுற்றியுள்ள பகுதிகள் சுற்றி வளைக்கப்பட்டன. இரவு 12 மணியளவில் அட்கோனா கிராமத்தில் அந்த புலியை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்தனர். மேலும் குருத்வாராவில் உள்ள ஒரு சுவற்றில் அந்த புலி ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததை பார்ப்பதற்காக ஏராளமானோர் திரண்டனர். இதற்கிடையில், வனத்துறையினரும் போலீசாரும், நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து அந்த புலிக்கு மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

புலியின் வைரல் வீடியோ