LOADING...
வசூல் வேட்டையில் ரன்வீர் சிங்! 1000 கோடியைத் தொட்ட துரந்தர்! இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது?
துரந்தர் வசூல் சாதனை

வசூல் வேட்டையில் ரன்வீர் சிங்! 1000 கோடியைத் தொட்ட துரந்தர்! இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 29, 2026
07:33 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் இந்தியத் திரையுலகின் முந்தைய சாதனைகளைத் தகர்த்து எறிந்துள்ளது. 2025 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான இப்படம், தற்போது இந்தியாவில் மட்டும் ₹1,000 கோடி வசூலைக் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையின் சிறப்பம்சம் என்னவென்றால், பல மொழிகளில் டப் செய்யப்பட்டு 1000 கோடி ஈட்டிய பாகுபலி 2, கேஜிஎப் 2 மற்றும் புஷ்பா 2 போன்ற படங்களுக்கு மத்தியில், ஒரே மொழியில் (ஹிந்தி) வெளியாகி 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை துரந்தர் பெற்றுள்ளது.

வசூல்

படத்தின் வசூல் நிலவரம்

படத்தின் தற்போதைய வசூல் இந்தியாவில் ₹1,002 கோடி மற்றும் உலகளவில் சுமார் ₹1,297 கோடி ஆகும். ஷாருக்கானின் ஜவான் (₹760 கோடி) படத்தின் சாதனையை முறியடித்து, இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹிந்திப் படமாக இது மாறியுள்ளது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் மிக விரைவில் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் 2026, மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இரண்டாம் பாகத்திற்கு துரந்தர்: தி ரிவெஞ்ச் என்று பெயரிடப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தின் டீசருக்கு சென்சார் போர்டு A சான்றிதழ் வழங்கியுள்ளது. இது முதல் பாகத்தை விட அதிக வன்முறை மற்றும் அதிரடி காட்சிகளைக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது.

கதைக்களம்

படத்தின் கதைக்களம்

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில், ரன்வீர் சிங் ஹம்சா அலி மசாரி என்ற இந்திய உளவாளியாக நடித்துள்ளார். பாகிஸ்தானின் லியாரி பகுதியில் ஊடுருவி, அங்கிருக்கும் பயங்கரவாதக் கும்பல்களை அழிப்பதே படத்தின் கதை. அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மற்றும் ஆர்.மாதவன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் இணைந்துள்ளது.

Advertisement