Page Loader
வீடியோ: வாரணாசி ரோட்ஷோவின் போது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற பிரதமர் மோடியின் வாகனங்கள் 
காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

வீடியோ: வாரணாசி ரோட்ஷோவின் போது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற பிரதமர் மோடியின் வாகனங்கள் 

எழுதியவர் Sindhuja SM
Dec 17, 2023
04:52 pm

செய்தி முன்னோட்டம்

இன்று வாரணாசியில் நடந்த ரோட்ஷோவின் போது, ஒரு ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக தனது கான்வாய் வாகனங்களை நிறுத்தினார் பிரதமர் மோடி. அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டு, செப்டம்பர் 30 ஆம் தேதியும் நடந்தது. கடந்த ஆண்டு, குஜராத்தில் ஒரு ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக பிரதமர் மோடியின் கான்வாய் மெயின் ரோட்டில் அப்படியே நிறுத்தப்பட்டது. அதேபோல், நவம்பர் 9, 2022 அன்று, ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில், ஒரு ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக பிரதமர் மோடி தனது கான்வாய்யை நிறுத்தினார். காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் பதிப்பை 'நமோ காட்' என்ற இடத்தில் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

 வாரணாசியில் இன்று எடுக்கப்பட்ட வீடியோ