Page Loader
மத்திய அரசின் வரி பகிர்வு - தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது
மத்திய அரசின் வரி பகிர்வு - தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது

மத்திய அரசின் வரி பகிர்வு - தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது

எழுதியவர் Nivetha P
Dec 22, 2023
05:57 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கும் மாதாந்திர வரிப்பகிர்வில் கூடுதல் தவணை தொகையாக ரூ.72.961.21 கோடி முன்னதாகவே விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 10ம்.,தேதி விடுவிக்கப்பட வேண்டிய வரிப்பகிர்வு தவணை இந்த டிசம்பர் 11ம்.,தேதியே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தவணை புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை கருத்தில் கொண்டு முன்னதாக வெளியிடப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. மத்திய அமைச்சகம் இது குறித்து அறிவிப்பு ஒன்றினையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில், மாநிலம் வாரியாக கொடுக்கப்பட்ட தவணை தொகை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூ.13,088.51 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்திற்கு ரூ.2,976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிப்பகிர்வு மூலம் மாநில வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்டவைகளை மாநிலஅரசு மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

முழு விவரங்கள்