
"உயிரை மாய்த்து கொள்ள அனுமதி வேண்டும்": உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண் நீதிபதி
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேச பெண் நீதிபதி ஒருவர், அம்மாநிலத்தில் உள்ள பாரபங்கி என்ற இடத்தில் பதவியில் இருந்தபோது, தனக்கு நேர்ந்த பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலைத் தொடர்ந்து, தற்கொலை செய்துகொள்ள தலைமை நீதிபதியின் அனுமதியை கேட்டுள்ள சம்பவம், நீதிபதிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் பணியில் உள்ள பெண் சிவில் நீதிபதி ஒருவர், பண்டா மாவட்ட நீதிபதிக்கு (District Judge) எதிராக பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகார் ஒன்றில் தான், மேற்கூறிய கோரிக்கையை விடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எழுதியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இந்த குற்றசாட்டு மீதான விசாரணையின் நிலை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற நிர்வாகத்திடம் இந்திய தலைமை நீதிபதி, தனஞ்சய ஒய் சந்திரசூட், அறிக்கை கேட்டுள்ளார்.
card 2
உள் புகார் குழு விசாரணை
பெண் நீதிபதி எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தலைமை நீதிபதி இந்த விசாரணையை குறித்து கேட்டுள்ளார்.
இரண்டு பக்க கடிதத்தில்,"கடந்த ஒன்றரை வருடங்களில் நான் நடை பிணமாக மாற்றப்பட்டேன். இந்த ஆன்மாவும் உயிரும் இல்லாத உடலைச் சுமந்து செல்வதில் எந்த நோக்கமும் இல்லை..எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும்,"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பெண் நீதிபதி முறையாக பதிவு செய்திருந்த வழக்கு, டிசம்பர் 4 ஆம் தேதி உச்ச நீதிமன்ற அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஆனால், பெண் நீதிபதியின் புகார், ஐசிசி (உள் புகார்க் குழு) முன்னர் விசாரணையில் இருப்பதால், தற்போதைக்கு எந்த நீதித்துறை உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை என்று பெஞ்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.