Page Loader
உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து: 1 குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி 
இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து: 1 குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி 

எழுதியவர் Sindhuja SM
Dec 10, 2023
09:50 am

செய்தி முன்னோட்டம்

உத்தரபிரதேச மாநிலம் போஜிபுரா அருகே பரேலி-நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று இரவு டிரக் மோதியதால் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாரியின் டம்பர் மீது காரின் டயர் மோதியதால், கார் நெடுஞ்சாலையின் எதிர்புறத்தில் கவிழ்ந்தது. அதன் பின், உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரியால், அந்த கார் இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான கார் மாருதி சுஸுகி எர்டிகா என்று கூறப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதற்கிடையில், இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

ட்ஜஸ்ன்

திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த போது நடந்த அவலம் 

"போஜிபுரா அருகே, நெடுஞ்சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டது. ஒரு கார் டிரக் மீது மோதியதை அடுத்து, அந்த கார் இழுத்துச் செல்லப்பட்ட பின்னர் தீப்பிடித்தது. கார் சென்ட்ரல் லாக் செய்யப்பட்டிருந்ததால் காருக்குள் இருந்தவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர். 7 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, மேற்பட்ட நடவடிக்கை நடந்து வருகிறது" என்று பரேலி எஸ்எஸ்பி குலே சுஷில் சந்திரபான் செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்துள்ளார். காரில் இருந்தவர்கள் ஒரு திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.