உயர்நீதிமன்றம்: செய்தி
சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பாக துல்கர் சல்மான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் தனது உயர் ரக கார்களில் ஒன்றை பறிமுதல் செய்ய சுங்கத் துறை எடுத்த முடிவை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உட்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு இன்று ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து, நாகார்ஜுனாவும் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா அக்கினேனி தனது ஆளுமை உரிமைகளை பாதுகாக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் பல முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
'பொன்னியின் செல்வன்' பதிப்புரிமை வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மானை விடுவித்தது டெல்லி உயர்நீதிமன்றம்
'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 'வீர ராஜ வீர' பாடல், ஜூனியர் தாகர் சகோதரர்களான உஸ்தாத் நாசிர் ஜாஹிருதீன் தாகர் மற்றும் உஸ்தாத் நாசிர் ஃபயாசுதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவ ஸ்துதியைப் போன்றது என தீர்ப்பளித்த ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை, டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பொது இடத்தில் சிலை: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள காய்கறி சந்தையின் நுழைவாயிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைப்பதற்கான தீர்மானத்தை வள்ளியூர் பேரூராட்சி நிறைவேற்றியது.
காவல்துறையின் பதிவேடுகளில் இருந்து சாதி விவரங்களை நீக்க உத்தரபிரதேச அரசு உத்தரவு
சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களையெடுக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, காவல்துறையின் பதிவேடுகள், பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் இருந்து சாதி தொடர்பான அனைத்து குறிப்புகளையும் நீக்க உத்தரவிட்டுள்ளது.
'நீதிபதியின் அறை வெடிக்கும்': டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெள்ளிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், உடனடியாக மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அனுமதியின்றி தனது பெயர், புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு
அனுமதியின்றி தன்னுடைய பெயர், புகைப்படங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது எனக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
ஆன்லைன் கேமிங் ஒழுங்குபடுத்தல் மற்றும் தடைச் சட்டம், 2025-ஐ எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாகப் பதிலளிக்கக் கர்நாடகா உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு எதிராக ஏ23 நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறைச் சட்டம், 2025 ஐ நிறைவேற்றிய பிறகு, இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டுத் துறை பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
ஆன்லைன் கேமிங் தடை சட்டத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க நிறுவனங்கள் திட்டம்
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025 ஐ எதிர்த்து, ரியல் மணி கேமிங் (RMG) நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றன.
மூட்டையில் பணம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை விசாரிக்க தனி குழுவை அமைத்தார் மக்களவை சபாநாயகர்
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
2006 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைப்பு
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை விசாரிப்பதிலிருந்து விலகி கொண்டார் தலைமை நீதிபதி கவாய்
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் இருந்து இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் விலகியுள்ளார்.
நீதிபதி வர்மா மீதான பதவி நீக்கத் தீர்மானம்: 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு
திங்களன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 152 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட குறிப்பாணையை சமர்ப்பித்ததை அடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
உச்ச நீதிமன்ற குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்த நீதிபதி யஷ்வந்த் வர்மா
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, தனது பதவி நீக்கத்தை பரிந்துரைத்த உள்ளக விசாரணை அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கூட்ட நெரிசலுக்கு RCB தான் காரணம் என்று கர்நாடகா அரசு அறிக்கை; விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது
ஜூன் 4ஆம் தேதி RCB கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மீது கர்நாடக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
பணத்தை திருப்பி கேட்ட தயாரிப்பாளர், பதிலுக்கு ரூ.9 கோடி இழப்பீடு கோரும் நடிகர் ரவி மோகன்
நடிகர் ரவி மோகனை இரண்டு படங்களில் ஒப்பந்தம் செய்த தயாரிப்பு நிறுவனம், அவரிடம் பணத்தை திருப்பி கேட்டு வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதிலாக நடிகர் ரவி மோகன் ரூ.9 கோடி இழப்பீடு கோரினார்.
பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்க கணவரின் கையெழுத்து எதற்கு? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருமணமான ஒரு பெண் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கணவரின் அனுமதி அல்லது கையொப்பம் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் அறிவித்துள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
LGBTQIA உரிமைகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், இந்தியாவில் அவர்களின் திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், ஒரே பாலின தம்பதிகள் ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரு கூட்ட நெரிசல்: தானாக முன்வந்து இன்று விசாரிக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட துயர கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரிக்கும்.
தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு: தக் லைஃப் காட்டிய கமல்
மன்னிப்பு கேட்பதற்கு கெடு விதித்த கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு, கமல் தனது பாணியில் பதிலளித்து உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் Vs கர்நாடக உயர் நீதிமன்றம்: இன்றுக்குள் மன்னிப்பு கேட்க கெடு- கேட்பாரா?
'தக் லைஃப்' படத்தின் ப்ரோமோஷனின் போது, "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெருஞ்சர்ச்சையை தூண்டியது.
கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்
கன்னட மொழியின் தோற்றம் குறித்த தனது சமீபத்திய கருத்துக்களுக்கு பரவலான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தனது வரவிருக்கும் திரைப்படமான தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடப்படுவதையும் திரையிடப்படுவதையும் உறுதி செய்ய உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேட்டை அம்பலப்படுத்திய ஊழியர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கவலை தெரிவித்துள்ளது.
இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தொடக்க நிலை நீதித்துறை சேவை பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வழக்கறிஞர்களுக்கான குறைந்தபட்ச பயிற்சி மூன்று ஆண்டு தேவையை உச்ச நீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
துருக்கியைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து தரை கையாளும் நிறுவனமான செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்திய அதிகாரிகளால் அதன் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கத் தொடங்கியது.
இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
உஃபா சட்டத்தின் கீழ் தண்டனையை முடித்தவுடன் நாடு கடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, இலங்கைத் தமிழர் ஒருவரைத் தடுத்து வைப்பதில் தலையிட உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (மே 19) மறுத்துவிட்டது.
அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கட்கிழமை (மே 19) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், கூடுதல் நீதிபதிகள் உட்பட அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
'தத்தெடுக்கும் தாய்மார்களுக்கும் மகப்பேறு விடுப்பு உரிமை உண்டு': சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்
குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு/குழந்தை தத்தெடுப்பு/மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள், நியமன செயல்முறை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டது
உச்ச நீதிமன்றம் தனது நீதிபதிகளின் சொத்து அறிவிப்புகளை அதன் வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஜப்தி உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ் திரையுலகத்தில் மட்டுமல்லாத உலக அரங்கில் பிரபலமடைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் மேலான ஜப்தி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லை: அலகாபாத் உயர்நீதிமன்றம்
சர்ச்சையான தீர்ப்புகளை வழங்கி வரும் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றுமொரு தீர்ப்பை வழங்கி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலியல் வழக்கில் மீண்டும் சர்ச்சையை தூண்டிய அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு
டெல்லியின் ஹவுஸ் காஸில் உள்ள ஒரு பாரில் சந்தித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
முடிவுக்கு வந்த சட்டப் போராட்டம்; வீர தீர சூரன் பகுதி 2 படத்தை வெளியிட அனுமதி
நடிகர் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கிய வீர தீர சூரன் பகுதி 2 திரைப்படத்தின் வெளியீடு வியாழக்கிழமை (மார்ச் 27) அன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திரையிடலுக்கு சற்று முன்பு சட்ட ரீதியாக தடையை எதிர்கொண்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த சர்ச்சையான தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அதிர்ச்சியூட்டும் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
₹1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து அமலாக்கத்துறையை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்றம்
பண விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய், நீதித்துறைப் பணிகளில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டார்.
பணப்பதுக்கல் சர்ச்சை; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
தீ விபத்துக்குப் பிறகு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் அதிக அளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, அவரது வீட்டில் விசாரணை நடத்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இடமாற்றத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை; உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இடமாற்றம், பண மீட்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஊகங்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நிராகரித்தது.
வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்; உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு
டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து அலகாபாத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பணிபுரிய தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி
தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு, தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.