LOADING...
தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு: தக் லைஃப் காட்டிய கமல்
மன்னிப்பு கேட்க முடியாது என தக் லைஃப் காட்டிய கமல்

தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு: தக் லைஃப் காட்டிய கமல்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 03, 2025
03:45 pm

செய்தி முன்னோட்டம்

மன்னிப்பு கேட்பதற்கு கெடு விதித்த கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு, கமல் தனது பாணியில் பதிலளித்து உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, "தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு. நாங்கள் பட வெளியீட்டை கர்நாடகாவில் ஒத்தி வைக்கிறோம்" என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 'தக் லைஃப்' பட ப்ரோமோஷனின் போது பேசிய சர்ச்சைக்கு தக் லைஃபாக பதில் தெரிவித்துள்ளார் கமல். "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெருஞ்சர்ச்சையை தூண்டியது. இதனைத்தொடர்ந்து தனது படத்தின் வெளியீட்டிற்கு பாதுகாப்பு கோரி கமல், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த பெஞ்ச், கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஒத்தி வைப்பு

நீங்க என்னடா தடை போடுறது, நானே ஒத்திவைக்கிறேன் என முடிவெடுத்த கமல்

முன்னதாக கர்நாடக உயர்நீதிமன்றம், மன்னிப்பு கேட்டால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதிக்க முடியுமென தெரிவித்து இன்று 2 மணிக்குள் பதில் கூறுமாறு தெரிவித்திருந்தது. 2 மணிக்கு, கமல் தரப்பு படத்தின் வெளியீட்டையே ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே "கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எந்த வகையிலும் கன்னட மொழியை தாழ்த்திப்பேசவில்லை'' என KFCC தலைவருக்கு இன்று கமல் கடிதம் எழுதியுள்ளார். "என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தம் அளிக்கிறது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதையை கொண்டுள்ளேன். நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பம் என்பதை தான் என் கருத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேன்"எனக்கூறியுள்ளார்.