LOADING...
கமல்ஹாசன் Vs கர்நாடக உயர் நீதிமன்றம்: இன்றுக்குள் மன்னிப்பு கேட்க கெடு- கேட்பாரா?
இன்றுக்குள் மன்னிப்பு கேட்க கெடு விதிப்பு

கமல்ஹாசன் Vs கர்நாடக உயர் நீதிமன்றம்: இன்றுக்குள் மன்னிப்பு கேட்க கெடு- கேட்பாரா?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 03, 2025
02:42 pm

செய்தி முன்னோட்டம்

'தக் லைஃப்' படத்தின் ப்ரோமோஷனின் போது, "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெருஞ்சர்ச்சையை தூண்டியது. இதனைத்தொடர்ந்து தனது படத்தின் வெளியீட்டிற்கு பாதுகாப்பு கோரி கமல், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த பெஞ்ச், கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற கூற்றுக்களைச் சொல்ல அவர் ஒரு வரலாற்றாசிரியரா அல்லது மொழியியலாளரா என்றும் கேட்டது. "எந்தவொரு மொழியும் இன்னொரு மொழியிலிருந்து பிறக்க முடியாது - சான்று எங்கே? இறுதியில் என்ன நடந்தது - இணக்கமின்மை," என்று நீதிமன்றம் கூறியது.

குறிப்புகள்

'ஒரு மன்னிப்பு, எல்லாம் தீர்ந்திருக்கும்'

பேச்சுரிமை என்பது உணர்வுகளைப் புண்படுத்தும் உரிமை அல்ல என்பதை வலியுறுத்திய நீதிமன்றம்," ஜலா , நிலா , பாஷே - இந்த மூன்று விஷயங்களும் குடிமக்களுக்கு முக்கியம்.... மொழி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுடன் இணைக்கப்பட்ட ஒரு உணர்வு. அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் நீங்கள் ஏதோ சொல்லிவிட்டீர்கள்" என்று கூறியது. "ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் எல்லாம் தீர்ந்திருக்கும்" என்று நீதிமன்றம் மேலும் கூறியது. "இதில் மன்னிப்பு எதுவும் இல்லை... இப்போது நீங்கள் பாதுகாப்பு தேடி இங்கு வந்துள்ளீர்கள். எந்த அடிப்படையில் நீங்கள் அந்த அறிக்கையை வெளியிட்டீர்கள்?" என்று லைவ்லாவின்படி நீதிமன்றம் கேட்டது.

மன்னிப்பு

அந்த அறிக்கையை திரும்பப் பெறுமாறும் நீதிமன்றம் கமலை வலியுறுத்தியது

"கர்நாடகாவிலிருந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்... ஆனால் உங்களுக்கு (கன்னட மக்கள்) தேவையில்லை என்றால் வருவாயை விட்டுவிடுங்கள்... ஆனால் பொதுமக்களின் உணர்வுகளைப் பாதிக்க நாங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம்... தவறுகள் நடக்கும்போது, ​​'இந்தச் சூழலில்தான் நான் பேசினேன் (ஆனால்) அது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்று சொல்ல வேண்டும்," என்று நீதிமன்றம் கூறியது. கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின, திரைப்பட வெளியீட்டு சர்ச்சையும் எழுந்தது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC), கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது. கன்னட ஆதரவு அமைப்புகளும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. இருப்பினும், அப்போது கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

நீதிமன்ற விவாதம்

அறிக்கை

கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என கமல் KFCCக்கு கடிதம்

"கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எந்த வகையிலும் கன்னட மொழியை தாழ்த்திப்பேசவில்லை'' என KFCC தலைவருக்கு இன்று கமல் கடிதம் எழுதியுள்ளார். மேலும்,"என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தம் அளிக்கிறது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதையை கொண்டுள்ளேன். நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பம் என்பதை தான் என் கருத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேன். நான் ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிறேன். கன்னட மக்களுக்கு உள்ள மொழிப்பற்றை நான் மதிக்கிறேன். பொது அமைதியின்மை, விரோதத்திற்கு ஒரு போதும் இடம் கொடுக்க நான் விரும்பவில்லை." எனக்கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கமல் அறிக்கை