
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஜப்தி உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகத்தில் மட்டுமல்லாத உலக அரங்கில் பிரபலமடைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் மேலான ஜப்தி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
முன்னதாக சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகனும், சிவாஜியும் பேரனுமான துஷ்யந்த், தான் படதயாரிப்பிற்காக வாங்கிய கடனை திருப்பி தர முடியாத காரணத்தால், அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரைவிடுமாறு பைனான்சியர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.
அந்த ஜப்தி உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபுவும், ராம்குமாரும் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவின் விசாரணையின் இறுதியில் ஜப்தி உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | 'அன்னை இல்லம்' வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!#SunNews | #SivajiGanesan | #MadrasHC pic.twitter.com/aO3NnlnZTs
— Sun News (@sunnewstamil) April 21, 2025
வழக்கு
எதற்காக இந்த ஜப்தி கோரப்பட்டது?
சிவாஜியின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், தனது 'ஈசன் புரொடக்சன்ஸ்' நிறுவனத்தின் மூலம் 'ஜகஜால கில்லாடி' திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இதில் விஷ்ணு விஷால் மற்றும் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்தனர்.
தயாரிப்பிற்காக, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ₹3.74 கோடி கடன் வாங்கப்பட்டது.
கடன் திருப்பி செலுத்தப்படாததால், அந்த நிறுவனம் வழக்கு தொடர, சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஜப்தி செய்ய வேண்டுமென நீதிமன்ற உதவியை நாடியது.
மனு
மனுக்கள் மற்றும் விசாரணை
இந்த வழக்கை எதிர்த்து ராம்குமார் மற்றும் பிரபு உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
அதில்,"அன்னை இல்லம் எனது இல்லமல்ல. அது என் தம்பி நடிகர் பிரபுவின் சொத்து" எனக் கூறி ராம்குமார் ஜப்தி உத்தரவை எதிர்த்தார்.
அதே நேரத்தில் நடிகர் பிரபுவும்"அன்னை இல்லம் எனது சொத்து" என உரிமை வாதம் செய்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
"அண்ணன் வாங்கிய கடனுக்காக தன்னுடைய சொத்தை தர முடியாது என்பது அவரின் வாதம்.
இந்த வழக்கில் இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில், "அன்னை இல்லம் நடிகர் பிரபுவின் சொத்துதான்" என உயர்நீதிமன்றம் உறுதி செய்து, ஜப்தி உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட்டது.
மேலும், பதிவுத்துறையில் உள்ள வில்லங்கப் பதிவு நீக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.