மீண்டும் ஒரு உத்தர பிரதேச நகரத்தின் பெயர் மாற்றம்: 'ஹரிகார்' ஆகிறது 'அலிகார்'
செய்தி முன்னோட்டம்
அலகாபாத்திற்கு அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் உள்ள மற்றொரு முக்கிய நகரத்தின் பெயர் மாற்றப்பட இருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் உள்ள 'அலிகார்' நகரின் முனிசிபல் கார்ப்பரேஷன் தங்கள் நகரத்தின் பெயரை ஹரிகார் என மாற்றும் திட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
மேயர் பிரசாந்த் சிங்கால் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த முன்மொழிவை அனைத்து கவுன்சிலர்களும் ஆதரித்தனர்.
உத்தரப்பிரதேச அரசு அலிகார் பெயரை மாற்றும் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், அது பாஜக ஆளும் மாநிலத்தில் பெயர் மாற்றப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
ஜனவரி 2019 இல் உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாநில பாஜக அரசு மாற்றியது.
ட்ஜ்கவ்
'அலிகார்' நகரத்தின் பெயர் எப்போது மாற்றப்படும்?
"நேற்று நடந்த கூட்டத்தில், அலிகார் பெயரை ஹரிகார் என மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். இனி, இந்த முன்மொழிவு நிர்வாகத்திற்கு அனுப்பப்படும். நிர்வாகம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்." என்று அலிகார் மேயர் பிரசாந்த் சிங்கால் கூறியுள்ளார்.
ஒரு மாநில அரசு மாநிலத்திற்குள் உள்ள எந்த நகரத்தின்/பகுதியின் பெயரையும் மாற்றலாம்.
ஒரு நகராட்சி அமைப்பால் முன்மொழியப்பட்ட பெயர் மாற்ற தீர்மானத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் கிடைத்ததும், அது மாநில அரசுக்கு அனுப்பப்படும்.
இந்த தீர்மானத்தை மாநில அரசு ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும்.
உள்துறை அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தால், மாநில அரசு அதிகாரப்பூர்வமாக பெயரை மாற்றலாம்.