
உத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம்
செய்தி முன்னோட்டம்
உத்திரப்பிரதேசத்தில் பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக எண்ணெய் அலையில் பணியாற்றி வந்த 18 வயது தலித் சிறுமி, எண்ணெய் கொப்பரையில் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்பத் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில், அந்த இளம்பெண் படுகாயமடைந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், ஆலை உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அந்தப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனுரா சில்வர்நகர் கிராமத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் வேலை பார்த்து வந்ததாகவும்,
அப்போது அவரது தங்கையிடம் ஆலை உரிமையாளர் பிரமோத் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜு மற்றும் சந்தீப் அத்துமீறியதாகவும், தங்கை மறுக்கவே அவரை ஜாதியை கூறித்திட்டி, எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
2nd card
படுகாயம் அடைந்த இளம் பெண்
டெல்லி மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும்,
அதை அப்பெண் தடுத்ததால், அவரின் ஜாதியை பயன்படுத்தி கடினமான வார்த்தைகளால் திட்டி, எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளி விட்டதாக தெரிவித்துள்ளார்.
அந்தப்பெண்ணின் உடலில் பாதிக்கு மேல் தீக்காயங்கள் ஏற்பட்டு, கால்கள் மற்றும் கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி, எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் மூவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
"அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என வட்டார காவல் அதிகாரி விஜய் சவுத்ரி தெரிவித்தார்.