விவசாயிகள் போராட்டம்: ஒருவர் பலி, 'டில்லி சலோ' ஊர்வலம் 2 தினங்களுக்கு இடைநிறுத்தம்
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகளின் 'டில்லி சலோ' அணிவகுப்பு இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது. இதற்கிடையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க விவசாயிகள் முக்கிய கூட்டம் நடத்த உள்ளனர். பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, நிலைமையை ஆலோசித்து, போராட்டம் குறித்த உறுதியான நடவடிக்கை எடுக்க உள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கானௌரியில் நடந்த மோதலின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டதாகவும், 12 காவலர்கள் காயமடைந்ததாகவும் செய்தி பரவியது. எனினும், யாரும் உயிரிழக்கவில்லை என ஹரியானா காவல்துறை மறுத்துள்ளது.
இரண்டு நாள் இடைநிறுத்தம்
கானௌரியில் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதலின் போது, 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் இறந்ததற்கு SKM இரங்கல் தெரிவித்ததுடன், தற்போதைய நெருக்கடி மற்றும் உயிரிழப்புக்கு மத்திய அரசு மட்டுமே பொறுப்பு என்று குற்றம் சாட்டியது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பாலோக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்கரன் சிங். முன்னதாக, இரண்டு நாட்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த போராட்டம், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு பயிர்களுக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் குறித்து மூன்று மத்திய அமைச்சர்கள் குழுவுடன் நான்காவது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கானௌரி மற்றும் ஷம்புவில் உள்ள பஞ்சாப் விவசாயிகள் புதன்கிழமை மீண்டும் தொடங்கியது. அப்போதுதான் இந்த துர்சம்பவம் நடந்துள்ளது. இதனை அடுத்து மீண்டும் போராட்டம் இடைநிறுத்தப்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது