சீறி வரும் காளைகள், தீரமான வீரர்கள்: பிரபல பாலமேடு ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
இன்று தமிழ்நாட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் விவசாயிகளின் நண்பனாக இருக்கும் மாட்டிற்கு வர்ணம் பூசி, அழகு படுத்தி, அவற்றிற்கு நன்றி தெரிவித்து வழிபடு செய்வார்கள்.
இந்த நாளின் முக்கிய நிகழ்வாக ஏறு தழுவுதலும் நடைபெறும். அதன்படி மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று, பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.
இப்போட்டியினை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!#SunNews | #PalameduJallikattu2025 | #Pongal2025 pic.twitter.com/gf7zFRfYBG
— Sun News (@sunnewstamil) January 15, 2025
விவரங்கள்
போட்டி தொடங்கும் முன்னர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது
முன்பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆய்வு செய்ய 120 பேர் கொண்ட மருத்துவக் குழு பரிசோதனை நடத்தி, காளையின் உடல்நிலை, பதிவு எண், கொம்பின் அளவு போன்ற அம்சங்களை சோதித்து உறுதி செய்தது.
அதன் பிறகு, உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு, மகாலிங்கசாமி மடத்துகாளை கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
பிறகு, அனைத்து காளைகளும் வாடிவாசலில் இருந்து வரிசையாக விடுவிக்கப்பட்டது. சீறிவந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்களின் தீரத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 1200 காளைகள் களம் காணவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை அடக்க 900 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பரிசு விவரங்கள்
டிராக்டர் முதல் தங்க நாணயம் வரை பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
இன்றைய ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட உள்ளது.
முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இது தவிர, இரண்டாம் பரிசாக காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப்பசு மற்றும் மாடுபிடி வீரருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மேலும், அண்டா, சைக்கிள், தங்க நாணயம், டிவி, பிரிட்ஜ் போன்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு திருவிழா - முதலில் 7 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன..#SunNews | #PalameduJallikattu2025 | #Pongal2025 | #Jallikattu2025 pic.twitter.com/f2c9LTbN0c
— Sun News (@sunnewstamil) January 15, 2025