என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயநிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
என்.எல்.சி.நிறுவனம் நிலத்தில் விளைந்திருந்த பயிர்களை சேதப்படுத்தியது மேலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அறுவடைக்காலம் வரை விவாசாயிகளுக்கு இடையூறு அளிக்கக்கூடாது என உத்தரவிடுமாறு பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.
அதன்படி என்.எல்.சி. நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடுத்தொகை வரும் ஆகஸ்ட்.,6ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் விசாரணை மீண்டும் இன்று(ஆகஸ்ட்.,7)நடந்தது, அப்போது 88 விவாசாயிகளுக்கு பயிர்சேதத்திற்கான இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு விட்டது என்றும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு தொகை கோருவதை நீதிமன்றம் ஏற்க கூடாது என்றும் என்.எல்.சி.தரப்பில் வாதாடப்பட்டது.
நிலம்
உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை
அதனைத்தொடர்ந்து, கருணைத் தொகை வழங்க கிராமங்களில் தமிழக அரசு அதிகாரிகளை கொண்டு குழுவினை நியமித்துள்ளது.
செப்டம்பர் 15ம்தேதிக்குள் இத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
தொடர்ந்து, இருத்தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர், நீதிபதி.,எஸ்.எம்.சுப்ரமணியம், 'விவசாயிகள் கண்முன்னே அவர்களது பயிர்கள் நாசமாவதை காணமுடியாதுதான்' என்றும்,
அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தும் போராட்டங்களில் அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகிறது.
அதற்கான இழப்பீட்டினை உரியவர்களிடம் இருந்தே அரசு வசூலிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல், என்.எல்.சி.நிறுவனத்தால் கையப்படுத்தப்பட்ட நிலங்கள் அறுவடை முடிந்ததும் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அதில் விவசாயிகள் புதிய பயிர்கள் எதுவும் பயிரிடக்கூடாது, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.