Page Loader
டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம்
மத்திய அரசுக்கு தங்களது வலிமையைக் காட்ட பாடுபடப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்

டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 14, 2024
09:15 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் வியாழக்கிழமை மகாபஞ்சாயத்து நடத்த உள்ளனர். சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் அழைப்பின் பேரில், மகாபஞ்சாயத்துக்கு முன்பாக உச்சனாவில் இருந்து ஜிண்ட் வரை பாத யாத்திரை நடத்தப் போவதாகவும், மத்திய அரசுக்கு தங்களது வலிமையைக் காட்ட பாடுபடப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டம் கொண்டு வர வேண்டும், அனைத்து விவசாயிகளின் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். பிப்ரவரி 18-ம் தேதி கடைசிச் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது, ​​மத்திய முகமைகள் மூலம் ஐந்து ஆண்டுகள் விவசாயிகளிடமிருந்து MSP விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கியது, அரசு. ஆனால், விவசாயிகள் அதனை நிராகரித்தனர்.

போராட்டக்களத்தில் வாழ்க்கை

ஷம்புவில் விவசாயிகள் எப்படி வாழ்கிறார்கள்? 

பஞ்சாப் உளவுத்துறையின் மதிப்பீட்டின்படி, சுமார் 7,000-8,000 விவசாயிகள் தொடர்ந்து ஷம்பு எல்லையில் தங்கியுள்ளனர். அவர்கள் அன்றாட வாழ்க்கையை எப்படி தொடர்கின்றனர்? டிராக்டரை தங்கள் கூடாரமாக மாற்றிக்கொண்டனர். அதில் LCD டிவி வசதியும் உண்டு. அதன்மூலம் போராட்டத்தின் நிலவரத்தை காணலாம். பல விவசாயிகள் தங்கள் டிரெய்லர்களில் டேபிள் ஃபேன்கள், பல்புகள் மற்றும் மரக் கட்டில்களை வைத்துள்ளனர். துணி துவைக்க, இலவச வாஷிங் மெஷின் சேவையும் உள்ளது. உடல்நலம் தொடர்பான அவசரநிலைகளுக்கு, கல்சா உதவி உட்பட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மருந்துகள் மற்றும் முதலுதவி வழங்கும் சிறு-சுகாதார மையங்களை அமைத்துள்ளன. உணவைப் பொறுத்தவரை, தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு பல இடங்களில் 24 மணிநேர லங்கார் எனப்படும் சமூக சமையலறை சேவைகள் உள்ளன.